என் மீதான தடையை சட்டரீதியாக சந்திப்பேன் : நிகிதா ஆவேசம்!!
Page 1 of 1

யாரோ ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்…? இப்பிரச்சனையை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என்று நடிகை நிகிதா ஆவேசமாக கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக சில நாட்களுக்கு முன்னர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது கணவர் தன்னை அடிக்கவில்லை என்று விஜயலெட்சுமி வழக்கை வாபஸ் பெற்றார். மேலும் நடிகை நிகிதாவுக்கும், தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, நடிகர் தர்ஷன் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில், தர்ஷன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, தர்ஷனின் குடும்ப பிரச்சினைக்கு காரணமான நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. `நடிகை நிகிதா கன்னட படம் எதிலும் நடிக்கக்கூடாது, அதேபோல அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே இந்தத் தடையை கடுமையாக எதிர்த்துள்ளார் நிகிதா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலெட்சுமிக்கும் இடையேயான குடும்ப சண்டையில், நான் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளேன்.
நான் சினிமாவில் ஆறு வருடங்களாக இருக்கிறேன். இதுவரை எந்த நடிகருடனும் என்னை இணைத்து பேசியது இல்லை. இங்குள்ள ரசிகர்கள் என் மேல் பிரியம் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன. என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர். நான் ஒழுக்கமான நடிகை. தர்ஷனுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது அவதூறானது. எனக்கும், தர்ஷனுக்கும் காதல் என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா…?
கடந்த வாரம் கூட என்னை போனில் தொடர்பு கொண்டு பேசிய தர்ஷனின் மனைவி விஜயலெட்சுமி, என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டினார். அப்படி இருக்கையில், திடீரென அவர் என் மீது, இப்படி ஒரு அபட்டமான பழியை சுமத்தியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நான் நடிப்பதற்கும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது. தவறு செய்யாத என்னை தண்டித்து உள்ளனர். யாரோ ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்…? இப்பிரச்சினையை சட்டரீதியாக நான் சந்திப்பேன், என் பக்கம் நியாயம் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லட்சுமிராய் வாய்ப்பை பறித்தேனா? : நிகிதா பதில்
» தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் ரெடி… நிகிதா
» மனைவி சித்ரவதை புகாரில் கைதான நடிகர் தர்ஷனுடன் மீண்டும் நடிப்பேன்: நிகிதா
» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum