நந்தி தத்துவம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
நந்தி தத்துவம்
நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. ஆக தர்மதேவதையே சிவ பெருமானின் வாகனமாக அமைந்துள்ளது. சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.
அவ்வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.
சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum