தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியக் கோயில்களில் நந்தி

Go down

இந்தியக் கோயில்களில் நந்தி Empty இந்தியக் கோயில்களில் நந்தி

Post  birundha Sat Apr 13, 2013 8:48 pm



பெங்களூருக்கு வடக்கே நந்திமலை உள்ளது. வடபெண்ணை, தென் பெண்ணை நதிகள் இங்கிருந்தே உற்பத்தியாகின்றன. இம்மலை மீது யோக நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. பெங்களூரில் பஸவன் குடியில் நந்திக்குத் தனியாக மிகப்பெரிய கோயில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நந்தி தேவரை பஸ்வேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தில் விருஷாசலம் என்ற தலம் உள்ளது.

விருஷம் என்றால் நந்தி என்று அர்த்தம். இங்குள்ள மலையில் உள்ள சிவாலயத்தில் உள்ள நந்தி வெண்மை நிறம் கொண்ட ஸ்வேத நந்தி ஆகும். இவ்வூருக்கு திருச்சிவப்பேரூர் என்று பெயர் நாளடைவில் இதுவே திருச்சூர் என்று ஆகிவிட்டது. இக்கோயிலில் சிவபெருமானுக்குப் பசுவின் நெய்யால் அபிஷேகம் நடைபெறுகிறது.

இங்கு கிடைக்கும் ஆயிரம் வருடம் பழமையான நெய் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. திருச்சூரில் உள்ள வடக்கு நாதர் கோயிலிலேயே உலகப் புகழ்பெற்ற பூரம். திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தின் மைசூரில் சாமுண்டேஸ்வரி கோயில் கொண்டிருக்கும் மலையில் பிரம்மாண்ட நந்தி உள்ளது.

மைசூருக்கு அருகே நஞ்சன்கோடு ஆலயத்தில் பெரிய நந்தியானது இறைவனை நோக்காமல் பிரதான சன்னதிக்குச் சிறிது இடதுபுறமாக வாசலைப் பார்த்து உள்ளது. கருங்கல்லில் உருவாக்கப்பட்டுள்ள இந்நந்தி அலங்கா நந்தி என்றழைக்கப்படுகிறது. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானைக் காக்கவே இந்த நந்தி காவல் இருப்பதாக ஐதீகம்.

இங்கு சிவனுக்கு சுக்கு, சர்க்கரை, வெண்ணை மூன்றும் கலந்து படைக்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்ற பகுதி உள்ளது. இங்கு பத்துமைல் சுற்றளவில் ஒன்பது நந்திகளின் கோயில்கள் உள்ளன. அவை பிரதம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சூர்யநந்தி, சோமநந்தி, சிவநந்தி, விஷ்ணுநந்தி, மகாநந்தி.

சிலாத முனிவர் தவம் செய்து நந்தியைத் தனது மகனாகப் பெற்ற இடம் மகாநந்தியே என்று கருதுகிறார்கள். இந்த நந்தியினால் ஏற்பட்ட தீர்த்தமே மகாநந்தி தீர்த்தம். எப்போதும் இக்குளத்தில் மார்பு அளவிற்கு நீர் தேங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. குளத்தின் மத்தியில் நந்தியின் உருவம் உள்ளது. இங்குள்ள இறைவன் மகாநந்தீஸ்வரர்.

அர்ச்சகர் யாருமின்றி ஒவ்வொரு பக்தரும் தானே சென்று பூஜை செய்யலாம். ஆந்திராவில் உள்ள நலகொண்டாவில் உள்ள சோமண்ணா கோவிலில் நந்தி மிகவும் அழகானது. வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ராமப்பா கோவிலும் இதுபோன்ற மிக அழகான நந்தி காணப்படுகிறது.

வராங்கல் அருகில் ஹனாம் கொண்டா அருகில் மும்மூர்த்திகளுக்கான கோவில் உள்ளது. காகதீய மன்னர்கள் கட்டிய இந்த ஆலயத்தில் மூன்று நந்திகள் உள்ளன. ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய நந்தி லேபாட்சி நந்தி. 15 அடி நீளமும் 27 அடி உயரமும் கொண்டது இது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum