திப்பிலி ரசம்
Page 1 of 1
திப்பிலி ரசம்
தேவையான பொருள்கள்:
கண்டதிப்பிலி = 2
அரிசி திப்பிலி = 2
சுக்கு = அரை புளியங்கொட்டை அளவு
புளி = அரை எலுமிச்சை அளவு
மிளகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = பாதி
கடுகு = அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி உப்பு போடவும். அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து புளித் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும்.
கொதித்து நுரைத்து வரும் போது சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கவும். நல்லெண்ணெயில் மிளகாய் வற்றல், கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சுவையான திப்பிலி ரசம் தயார்.
மருத்துவ குணங்கள்:
திப்பிலியில் பீட்டா கரோட்டின், செலினியம், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது.
இதனால் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய் போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் கட்டிகள், வயிற்று வலி, தசை வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.
இந்த திப்பிலி ரசம் நீண்ட பிரயாணத்தின் பின் உடலில் தோன்றும் வலியை போக்கவும், ஜீரணசக்தியைத் தூண்டவும் பயன்படுத்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum