தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவின் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்! – ஸ்ருதிஹாசன்

Go down

சூர்யாவின் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்! – ஸ்ருதிஹாசன் Empty சூர்யாவின் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்! – ஸ்ருதிஹாசன்

Post  ishwarya Fri Apr 12, 2013 1:14 pm

அப்பா கமல், அம்மா சரிகா ஆகிய இரண்டு பேரின் அற்புதக் கலவை ஸ்ருதிஹாசன்! அப்பா கலைஞானியைப் போலவே தனது பன்முகத் திறமைகளால் கவனிக்க வைக்கும் இந்த இருபது வயது இளமைப்புயல் அறிமுகமானது பாலிவுட்டில்! ‘லக்’ என்ற இந்திப்படம் அவரது பாலிவுட் அதிர்ஷ்டத்துக்கு பரிசோதனைக் களமாக அமைந்தாலும், அந்த படத்தின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், ஸ்ருதிக்கு கிடைத்தது ஒரு பாராட்டு!

‘வாவ்! தாய் எட்டடி பாய்ந்தால்..! குட்டி பதினாறடி பாய்கிறதே..!’ அதன் பிறகு அப்பா இயக்கி நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்தார் ஸ்ருதிஹாசன். இசையிலும் ஸ்ருதி புயல்தான் என்பதை நிரூபித்த கையோடு, தெலுங்கில் ஒரு படம், தற்போது தமிழில் ஒரு படம் என்று, அப்பாவைப் போல நடிக்கும் படங்களில் பாடிக்கொண்டே தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷின் ’3′ படத்துக்காக சென்னை ஒய்.எம்.சியே மைதானத்தில் ஸ்ருதி கோல்ப் விளையாடுவது போன்ற காட்சியில் நடிக்க வந்திருந்த ஸ்ருதிஹாசனை சந்தித்த போது,

கமலின் மகள் என்பதுதானே உங்களுக்கு துருப்புச் சீட்டு?

ஏன் எனது தனிப்பட்ட திறமைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?! என்னை நோக்கி இத்தனை விரைவாக புகழ் வந்து சேர்வதற்கு நான், கமலின் மகள் என்பது முக்கியமான காரணம். புகழ் இனிமையானது, ஆனால் புகழைக் கெடுத்துக் கொள்ளாமல் நம்மை தற்காத்துக் கொள்வது துன்பகரமானது. என்னை உருவாக்கியவர் என் தந்தை. அவரது முழு ஆதரவும், வழிகாட்டலும் எனக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மொத்த உலகையும் கலக்க விரும்புகிறேன். எனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறேன். அதை விட்டு ஒருபோதும் தாண்ட மாட்டேன்.

எப்படி வந்திருக்கிறது ’7ஆம் அறிவு’?

நான் எத்தனை விவரித்துச் சொன்னாலும் அந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை என்னால் உங்களுக்கு தரமுடியாது. உலகத்தரத்துக்கு நமது படங்கள் எப்போது உருவாகும் என்று இனி விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த உலகத்துக்கு நாம் எவ்வளவு பங்களிப்பை செய்திருக்கிறோம், ஆனால் நமது பலம் நமக்கே தெரிவதில்லை. தமிழர்கள் எப்போது தங்கள் பெருமைகளை உணர்ந்து கொண்டு நடக்கப் போகிறார்கள் என்பதுதான் ’7ஆம் அறிவின்’ கதை, கனவு எல்லாமே!

இந்த படத்தில் இரண்டு அசுரர்கள்! ஒருவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்னொருவர் சூர்யா. குறிப்பாக சலிப்போ அலுப்போ இல்லாத எதற்கும் தயாராக இருக்கும் குணத்தை நான் சூர்யாவிடம் பார்க்கிறேன். சூர்யாவை இந்தப் படம் இன்னும் மேலே உயர்த்தும். அவருடன் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்.

என்ன இத்தனை ஜாக்கிரதையாக பேசுகிறீர்கள்? படத்தைப் பற்றி வாயைத்திறக்காதீர்கள் என்று இயக்குநர் முருகதாஸ் உங்களுக்கு தடை விதித்து இருக்கிறாரா?

இதை தடை என்று சொல்லக் கூடாது! பணத்தை தண்ணீ­ராக செலவளித்து தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தை பற்றி நான் உளறிக் கொட்டி விடக்கூடாது. அந்தப் படத்தின் ஹீரோயினாக எனக்கே பொறுப்பு அதிகமாக இருக்கிறதே! இருந்தாலும் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் எல்லைவரை சென்று படத்தைப் பற்றிச் சொல்லலாம்.

தமிழர்களின் வீரக்கலையான களறி, சிலம்பம் இரண்டையுமே உலகத்துக்கு கொடுத்தவர்கள் நாம்தான். இந்த பெருமையை நாம் மறந்து விட்டோம். கராத்தே, குங்பூ, ஜூடோ என உலகம் கொண்டாடும் தற்காப்புக் கலைகளை போதி தர்மரும், அவரது வழித்தோன்றல்களும் சீனர்களுக்கு கற்பித்தார்கள். களறிதான் கராத்தே அனது. அது மட்டுமல்ல.. நமது பாரம்பரிய மருத்துவ முறையையும் சீனர்களுக்கு நாம் கொடையாக கொடுத்திருக்கிறோம். ஆனால் சீனா இன்று சர்வதேச அரசியலில் நமக்கு எதிர்துருவத்தில் இருக்கும் நாடாக இருக்கிறது.

நமது கொடைகளை போதி தர்மர் கதாபாத்திரம் வழியாக பேசும் அதேநேரம் இந்த எதிர் அரசியலையும் வில்லன் கதாபாத்திரம் வழியாக இயக்குநர் பேசியிருக்கிறார்.

இந்தபடத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் மரபுவழி ஜீன்களை ஆராயும் ஒரு இளம் விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன்.

அவ்வளவுதானா?

தீபாவளி வரை நீங்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

இதில் நீங்கள் கால எந்திரத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி என்று செய்திகள் வந்ததே?

அது கற்பனையான செய்தி. இதில் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பது டி.என்.ஏக்கள். ஐய்யோ! கதையின் முக்கியமான மையப்புள்ளியை உளறி விட்டேன். அடுத்த கேள்வியை கேளுங்களேன்.

உங்களுக்கும் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி?

பர்பெக்ட் என்றார் அப்பா பாடல் காட்சிகளை பார்த்து விட்டு. முக்கியமாக அண்டர் வட்டார் காட்சிகளில் நான் கஷ்டப்பட்டு நடித்திருப்பதாகச் சொன்னார். ’7ஆம் அறிவின்’ டீம் ஒர்க்கை பார்த்து வியக்கிறார். அப்பா சொல்லி விட்டார். இனி ரசிகர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

முருகதாஸ் எப்படி?

யாரையும் உருவத்தை வைத்து எடைபோடக் கூடாது என்பதற்கு அவர் மிகசிறந்த உதாராணம். எனக்குத் தெரிந்து ஹாலிவுட்டில் முருகதாஸ் சார் சுலபமாக நுழைந்து வரமுடியும். அப்பா திரைக்கதை பற்றி என்னிடமும் தங்கைகளிடமும் நிறைய பேசுவார். அப்பாவைப் போலவே திரைக்கதையை நம்பும் இயக்குநர். அவருக்கு மொழி ஒரு பிரச்சினையே இல்லை. பிளானிங் அண்ட் எக்சிகுஸனின் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பந்தா இல்லாத மாபெரும் இயக்குநர். ’7ஆம் அறிவு’ அவருக்கு புதிய எல்லைகளை திறந்து விடும்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் மூன்று பற்றி?

இளமையும் புத்திசாலித்தனமும் நிறைந்த கதை. ஐஸ்வர்யாவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். தமிழில் பெண் இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் அவருக்கு இடம் இருக்கிறது. தனுஷ்..! சான்ஸே இல்லை. ஆக்ஷன் என்ற சத்தம் வந்ததுமே கதாபாத்திரமாக மாறிவிடும் ஜாலத்தை செய்து விடுகிறார்.

‘Such a dedicate actor’!

ஸ்ருதிக்கு கண்களில் பிரச்சினை என்று செய்திகள் வெளியானதே!

நான்கு மாதங்களுக்கு முன் நான் டுவிட்டரில் ஃபீல் பண்ணியதை இத்தனை சீக்கிரமாக செய்தியாக்கி இருகிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல கண்ணாடிகளும், காண்டாக்ட் லென்ஸூகளும் இருக்கும்போது எதற்கு கவலைபட வேண்டும். ச்சூ அது ஒன்னுமே இல்லை!

’3′ படம் தவிர தற்போது வேறு படங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?

‘தபாங்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் உடன் திரைவெளியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்துக்கு முன்பே ஒப்புகொண்ட ‘ஓ மை பிரண்ட்’, ‘தம்முடு’ ஆகிய படங்கள் முடியும் தருவாயில் இருகின்றன.

மறுபடியும் சினிமா இசையமைப்பு?

இப்போதைக்கு கிடையாது. ஆனால் அப்பாவின் விஸ்வரூபத்தில் பாடல் பாடுவேன். அப்பாவே கேட்டிருக்கிறார். இசைப்புயலின் சர்வதேச இசை ஆல்பத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறேன். தமிழில் ‘ஒஸ்தி’ படத்துக்காக ஒரு பாடல் பாடிக்கொடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு இறுதியில் எனது ஆல்பத்துகான கம்போஸிங்குக்கு திட்டமிட்டு இருக்கிறேன்.

உங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?

நான் ஒரு தமிழ்பொண்ணு என்ற அடையாளம்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum