சீதை கொடுத்த திதி?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
சீதை கொடுத்த திதி?
ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்ததினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிச்சை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணர் திரும்பவில்லை! இராமர் தம்பியைத் தேடிப்புறப்பட்டார். சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள்.
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேகவைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். "சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார் மாமனாரான தசரதர். "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?'' என்று சீதை தயங்கினாள்.
"சிரார்த்த காலம் தவறி ஆசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை'' என்றார் தசரதர். சீதை பல்குநதி, பசு, அக்கினி, தாழை நான்கினிடமும் "உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள்.
பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிதுநேரத்தில் ஸ்ரீராம லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். "சீதா, சீக்கிரம் சமையல் செய்'' என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் "சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை'' என்றார்.
"நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குநதி பசு, அக்கினி, தாழை இந்நான்கையும் சாட்சி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்றாள். ராமர், "சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா'' என்று கேட்க, நான்கும் `நாங்கள் அறியோம்' என்று சொல்லி விட்டன.
கர்த்தாவான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. ராமர் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்'' என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள்.
ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. "ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்'' என்றது அசரீரி.
அதன் பின் ராமர் சமாதானமானார். "பல்குநதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது! பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன்! தாழம்பூவே! சிவபக்தையான நான் இனி உன்னை சிவபூஜைக்கு எடுக்க மாட்டேன்! அக்கினியே! இனி நீ அசுத்தத்தையும் ஸ்வீகரிப்பாய்'' என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சீதை கொடுத்த திதி?
» சீதை கொடுத்த திதி?
» திதிதிதி திதி திதி திதி திதி
» திரவுபதியான சீதை!
» ஆடி அமாவாசை: மறைந்த பெற்றோருக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்
» சீதை கொடுத்த திதி?
» திதிதிதி திதி திதி திதி திதி
» திரவுபதியான சீதை!
» ஆடி அமாவாசை: மறைந்த பெற்றோருக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum