பண்ணைப்புரம் தோட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா உடல் அடக்கம்
Page 1 of 1

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் இன்று அவரது பாட்டியும், இளையராஜாவின் தாயாருமான சின்னத்தாயின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், மலையாளத் திரையுலகினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று நள்ளிரவைத் தாண்டி பண்ணைப்புரத்திற்கு உடல் வந்து சேர்ந்தது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை உடல் அடக்கம் நடைபெற்றது. பண்ணைப்புரம் அருகே உள்ள லோயல் கேம்ப்பில் உள்ள தோட்டத்தில், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இளையராஜாவின் சிறு பிராயத்து நண்பரான பாரதிராஜவும் உடன் இருந்தார். இளையராஜா குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் எனபலரும் கலந்து கொண்டனர். பின்னர் ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.
இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே இருந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!
» இளையராஜாவின் 920-வது படம்!
» இளையராஜாவின் புத்தகங்கள் வெளியீடு!
» கொலவெறி அனிருத்தின் அநியாய அடக்கம்…!
» இளையராஜாவின் இனிப்பு செய்தி
» இளையராஜாவின் 920-வது படம்!
» இளையராஜாவின் புத்தகங்கள் வெளியீடு!
» கொலவெறி அனிருத்தின் அநியாய அடக்கம்…!
» இளையராஜாவின் இனிப்பு செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum