தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: கரண், அஞ்சலி படத்தை வெளியிடக்கூடாது – கலெக்டரிடம் மனு

Go down

குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: கரண், அஞ்சலி படத்தை வெளியிடக்கூடாது – கலெக்டரிடம் மனு Empty குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: கரண், அஞ்சலி படத்தை வெளியிடக்கூடாது – கலெக்டரிடம் மனு

Post  ishwarya Wed Apr 10, 2013 5:33 pm

நடிகர் கரண், அஞ்சலி நடித்த படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். டைரக்டர் வடிவுடையான் இயக்கி உள்ளார். இந்த படம் குமரி மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறி இருந்தார். இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் நடந்தபோதே எதிர்ப்புகள் கிளம்பியது. படப்பிடிப்பு குழுவினர் மீதும் தாக்குதல் நடந்தது. இருந்தும் படம் முழுவதும் எடுக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த தகவல் அறிந்ததும் தமிழ்நாடு லயன்பால் அசோசியேசன் என்ற அமைப்பு படத்தை வெளியிடக்கூடாது என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 50 பேர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தை வெளியிடக்கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் தமிழ்நாடு லயன்பால் அசோசியேன் அமைப்பின் சட்ட ஆலோசகர் சஜிவ்கேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தில் குமரி மாவட்ட மக்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்த்தோம். அப்போது படப்பிடிப்பு குழுவினர் படம் உருவானதும் அதை எங்களுக்கு போட்டு காண்பிப்பதாக கூறி இருந்தனர். ஆனால் இப்போது படத்தை வெளியிட அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் டிரைலரும் தயாராகிவிட்டது.

அதில் கூட குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகளும், போலீஸ் நிலையத்தை சூறையாடுவது போலவும் காட்டப்படுகிறது. எனவே இந்த படத்தை திரையிடக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum