வடகிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளுக்கு எதிராய் டெல்லி உயர்நீதிமன்றில் வழக்கு!
Page 1 of 1

1990ம் ஆண்டு மார்ச் மாதம் ஈழப்பிரகடனம் செய்து விட்டு இந்திய அமைதிப்படையுடன் வெளியேறி, இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர்தான் இந்த வரதராஜ பெருமாள்.இவர் பத்நாபா தலைமையில் இயங்கிவந்த EPRLF(Eelam People’s Revolutionary Liberation Front) இயக்கத்தினை சேந்தவர்.
இவர் பாதுகாப்பாக தங்கவைகபட்டுள்ள ரகசிய இடம் பொதுமக்களுக்குஇடையூறாக இருப்பதாகவும், இவரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய இந்தியா, அவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக இரகசியமாக பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டார். தற்போது அவர், புதுடில்லி சர்வோதயா என்கிளேவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார் என்று தெரியவருகிறது.
இவர் தங்கிருந்த இடம் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய டெல்லி காவல்துறை மூலமே இப்போது தெரியவந்திருக்கிறது. இவருக்கு பாதுகாப்பாக 25 காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவரின் குடியிருப்புக்கு அருகிலுள்ள, டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவினை இவர்கள் ஆக்கரிமித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்ததாகவும், அங்கு பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதித்ததாகவும், அதனாலேயே சர்வோதயா என்கிளேவ் குடியிருப்புகள் நலச் சங்கத்தினர் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவருக்கு எதிராய் வழக்கு தொடுத்திருப்பதாக தெரியவருகிறது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: சட்ட விரோதமாக பூங்காவை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதால் பாதுகாவலர்களுடன் வரதராஜப் பெருமாளை வேறு இடத்துக்கு மாற்ற நடுவண், மற்றும் மாநில அரசுகளுக்கு ஆணையிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவை நேற்று ஆய்வு செய்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. சிக்ரி, அது குறித்து பதில் அளிக்கும்படி நடுவண் அரசுக்கும் புதுடில்லி மாநில அரசுக்கும் ஆணை பிறப்பித்துள்ளார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப.சண்முகம் காலமானார்
» வடகிழக்கு மூலை
» வடகிழக்கு பகுதியும், திருமண தடையும்
» முன்னாள் முதல்வர்தான் என் கணவர் – நடிகை பேட்டி
» ஒரு நாளைக்கு 22 அமெரிக்க முன்னாள் படையினர் தற்கொலை'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum