தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!

Go down

சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா! Empty சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!

Post  amma Fri Apr 05, 2013 12:36 pm

வித்யா ஒரு பல் மருத்துவர் என்றாலும், அடுத்தவர் களுக்கு சமூக சேவை செய்வதில்தான் தனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்கிறார் இந்த புதுமைப் பெண்.

எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் இருப்பார்கள். அந்த வகையில், எனக்கு ரோல் மாடலாக இருப்பவர் சிவா நம்பி. `சைக்யாட்டிரிஸ்ட்’ ஆன இவர், தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் அவ்வளவு பொறு மையாக பேசுவார். எவ்வளவு நேரம் ஆனாலும் அதே பொறுமை நீடிக்கும். அதோடு, சேவை மனப்பான்மையும் அவருக்கு நிறைய உண்டு. அவரை சந்தித்த பிறகு எனக்குள்ளும் சேவை மனப்பான்மை எண்ணம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான், கடந்த 7 ஆண்டு களாக கிராமப்புற பெண்களின் உடல் ஆரோக்கியம், எச்.அய்.வி., கேன்சர் தொடர்பான விழிப்புணர்வோடு, டீன்-ஏஜ் பருவத்தினருக்கான கவுன்சலிங்கையும் இலவசமாக தந்து வருகிறேன்…” என்று சொல்லும் வித்யா, சென்னை கிழக்கு முகப்பேரில் வசித்து வருகிறார். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிங்காரச் சென்னைதான்! மருத்துவர் வித்யா மேலும் கூறியிருப்பதாவது:-

இன்றைய சமூகத்தில் எவ்வளவோ வளர்ச்சிகள் இருந்தாலும், கிராமப்புற பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மிகவும் அப்பாவியாய் இருக் கிறார்கள். தங்களது ஆரோக்கியக்குறையை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களுக்கு என்ன உடல் உபாதைகள் வரும் என்பது கூட தெரியாமல்தான் வளர்கிறார்கள். அவர்களில் 10இல் 9 பேர் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கர்ப்பப் பை கட்டி போன்ற பிரச்சினைகள் தங்களுக்கு இருந்தாலும், அதற்கு சிகிச்சை எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதேநேரம், தங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இவர்கள்தான் அவர்களைவிட அதிகமாய் துடித்துப் போகிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகுதான் தாங்கள் நிம்மதியாய் இருப்பதாக உணர்கிறார்கள். இந்த கிராமப்புற பெண்களிடம் உள்ள இன்னொரு பெரிய பிரச்சினை, ஒரு பெண் பருவ வயதை அடைந்த பிறகு ஏற்படும் பீரியட்ஸ். அந்த மூன்று நாட்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எந்த பெண்ணுக்குமே தெரிவதில்லை. இதனால்தான் கிராமப்புற பெண்களை தேடிச் சென்று, அவர்களுள் ஒருத்தியாக பழகி என்னால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

மேலும் இன்றைய இளைஞர்கள் நிறைய பேரிடம் புகை பிடிக்கும் மற்றும் போதை வஸ்துகளை உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. ஆரம்பத்தில், ஒரு ஸ்டைலுக்காக, அதாவது… அடுத்தவர்களைப் பார்த்து, அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே… என்று இந்த பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் ஆக ஆக அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒருவர் போதை வஸ்துகளை உதடுக்கு அடியில் அல்லது வாயின் இடுக்குகளில் தொடர்ந்து வைத்து வந்தால், அவரது நாக்கால் சுவையை உணர முடியாமல் போய்விடும். நாவில் உள்ள உணர்ச்சி நரம்புகளின் செயல்களை, போதை பொருளில் உள்ள நிக்கோடின் தடுத்து நிறுத்திவிடும். சாதாரணமாக ஒருவரது வாய் 3 மில்லிமீட்டர் அளவுக்கு, அதாவது அவரது மூன்று விரல்களை ஒரேநேரத்தில் வாயினுள் நுழைக்கும் அளவிற்கு திறக்கும். போதை பழக்கத்திற்கு அடிமையானால் படிப்படியாக வாயின் தசைப் பகுதிகள் இறுகி அதன் திறக்கும் அளவு குறைந்து விடும். கடைசியில் கேன்சரில் கொண்டுபோய் விட்டுவிடும். தொண்டை, வாயில் அந்த கேன்சர் பாதிப்பு வெளிப்படும். போதை பொருளுக்கு மட்டுமின்றி, சாதாரணமாக பயன்படுத்தும் புகையிலையும் இதே பாதிப்பை ஏற்படுத்திவிடும். வாயில் காணப்படும் வலி தெரியாத நாட்பட்ட புண், கட்டிகள் ஆகியவை வாயில் கேன்சர் தோன்றுவதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. கேன்சருக்கு மாத்திரைகள் பாதி மருந்து என்றால், மீதி மருந்து அந்த நோயாளிக்கு தரப்படும் கவுன்சலிங்கும், தைரியமும்தான்!

கிராமம்-நகரம், ஏழை-பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லா வயதினர் இடையேயும் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதற்காகவே `வளமுடன் வாழ்வோம்’ என்ற அமைப்பை துவங்கி, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் எச்.அய்.வி. தொடர்பான விழிப்புணர்வு பேச்சு மற்றும் கவுன்சலிங் கொடுத்து வருகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை 75 முதல் 80 சதவிகிதம் பேரிடம் எச்.அய்.வி. தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், எய்ட்ஸ் பற்றி வெளியே பேச தயங்குகிறார்கள். கிராமப்புற பெண்களிடம் எய்ட்ஸ் தொடர்பாக பேச வேண்டும் என்றால் அவர்களில் ஒருவராகவே மாறிவிட வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேசினால்தான் நம்மிடம் இதுபற்றிய பேச்சையே எடுப்பார்கள். அவர்களில் 10இல் 2 பேர் நாம் சொல்வதைக் கேட்டாலே பெரிய வெற்றிதான். எய்ட்ஸ் விழிப்புணர்வு தர என்னை அணுகினால், அந்த சமூகசேவையை செய்ய நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்.

ஒருமுறை சென்னையில் உள்ள அய்.டி. நிறுவனம் ஒன்றில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை நான் தந்து கொண்டிருந்தபோது ஒரே ஒரு நபர் மட்டும் தயக்கத்தோடு சில கேள்விகளைக் கேட்டார். அதை வைத்தே, அவர் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக பயப்படுகிறார் என்பது எனக்கு புரிந்து விட்டது. அவரை தனியாக அழைத்து கவுன்சலிங் தந்தபோது, தனக்கு தவறான பெண்களோடு `தொடர்பு’ இருந்ததாகவும், அதனால் தனக்கு எய்ட்ஸ் வந்திருக்கலாம் என்று பயப்படுவதாகவும் சொன்னார். அவருக்கு தைரியம் கொடுத்து, ரத்தப் பரிசோதனை செய்தபோது, அவர் பயந்தது போலவே எய்ட்ஸ் இருப்பது உறுதியானது. அந்த நேரத்தில் அவருக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டிருந்தார்கள். மனைவியாக வரக்கூடிய பெண்ணிடம் உண்மையை மறைக்க விரும்பாத அவர், தன்னை மணக்க சம்மதித்த – அதே அய்.டி. துறையில் உள்ள பெண்ணிடம், தனது நோய் பாதிப்பு பற்றி கூற… அவளும் அவரது உண்மையான பேச்சை அங்கீகரிக்கும் வகையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து திருமணமும் செய்து கொண்டாள். இப்போது அவர்கள் சந்தோஷ மாகத்தான் வாழ்கிறார்கள். எதோ ஒருவித புரிதல் அவர்களுக்குள் திருமண பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் நான் ஒரு பல் டாக்டர் என்பதால், `மொபைல் டென்டிஸ்ட்ரி’ என்கிற நடமாடும் பல் சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கே தேடிச் சென்று அளித்து வருகிறேன். 6 மாதத்திற்கு முன்பு வயதான பெண் ஒருவருக்கு அவரது வீட்டிற்குச் சென்று பல் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் அளித்தேன். சிகிச்சை முடிந்த பிறகு அந்த பெண் என்னை வெகுவாக பாராட்டினார். `வயசான காலத்துல எப்படி ஆஸ்பத்திரிக்கு போகுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, நீயே வீடு தேடி வந்து சிகிச்சை தந்தது ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு’ என்று அவர் தெரிவித்தார். அப்போது அவரது முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது. அதற்கு பிறகுதான் இந்த சேவையை செய்து வருகிறேன். வயதானவர்கள், நடக்க முடியாத மற்றும் மனம் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரமே இப்படி தேடிச் சென்று சிகிச்சை அளித்து வருகிறேன்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கும்போது அதில் நமக்கு கஷ்டம் தெரியாது. சிகிச்சை முடிந்த பிறகு அவர்களது முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கும்போதே எனக்கும் சந்தோஷம் பிறந்து விடும்…” என்கிற வித்யாவிடம், ஒரு பெண்ணுக்கே உரிய தாய்மை உணர்வு கொஞ்சம் கூடுதலாகவே பளிச்சிடுகிறது.

பல்வேறு விழிப்புணர்வு சேவைகளுக்காக `ஸ்டார் அச்சீவர்’ என்கிற விருதை பெற்றிருக்கும் மருத்துவர் வித்யா, `மொபைல் டென்டிஸ்ட்ரி’ என்கிற புதுமையான மருத்துவ சேவையை முதன் முதலில் துவக்கி செய்து வருவதற்காக `சிறந்த இளம் சாதனையாளர்’ விருதையும் அண்மையில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!
» சமூக சேவையில் நட்சத்திரங்கள்
» மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்
» விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum