’3′ படத்தில் இருந்து கொல வெறி பாட்டை நீக்க திட்டமிட்டோம்: ஐஸ்வர்யா தனுஷ்
Page 1 of 1

திரையுலக அனுபவம் குடும்ப வாழ்க்கை போன்றவை குறித்து ஐஸ்வர்யா அளித்த பேட்டி வருமாறு:-
சவுந்தர்யாவையும் என்னையும் சிறு வயதில் இருந்தே வீட்டில் ஆச்சாரமாக வளர்த்தனர். சினிமாவுக்கு போககூட அனுமதிக்கவில்லை. பழைய படங்களைத்தான் வீட்டில் பார்க்க முடிந்தது.
நாங்கள் இருவரும் வெளியில் பிரிமியர் ஷோவுக்கு போய் பார்த்த முதல் படம் ‘தளபதி’. எங்கள் தந்தை ரஜினி வீட்டில் நல்ல அப்பாவாக இருந்தார். சூப்பர் ஸ்டாராக அவர் நடந்து கொண்டதே இல்லை. அப்பா-மகள் என்ற பந்தத்தை மீறி நண்பர்களாகவே பார்த்தார்.
பதினைந்து வயதில் பரத நாட்டியம் கற்றேன். அதுதான் என் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தது. நான் இயக்குனரானேன். சவுந்தர்யா டிஜிட்டல் பக்கம் போய்விட்டார்.
தனுசுக்கும், எனக்கும் வேகவேகமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் முதல் தடவையாக சந்தித்து பேசியதில் இருந்து ஆறு மாதத்தில் திருமணம் செய்து கொண்டோம். தனுசுக்கு வயது குறைவு என்று அவரது பெற்றோர் யோசித்தனர். எனது பெற்றோர் அவசரப்படுறீயா? என்று மட்டும் கேட்டனர். பிறகு எங்கள் இஷ்டப்படி திருமணத்தை முடித்து வைத்தனர்.
நானும் தனுசும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கிறோம். எங்களின் விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரி இருக்கிறது. இதுவே எங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்தி செல்கிறது.
ஒரு நடிகரின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நடிகர் மனைவிக்கு பொறுமை அவசியம். ‘3’ படத்தை எடுக்க தனுஷ் ரொம்ப உதவியாக இருந்தார். ஸ்ருதியும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
‘கொலவெறி‘ பாடல் இண்டர்நெட்டில் லீக் ஆனதும் அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கிவிட முடிவு செய்தேன். இன்னொரு ‘டியூன்’ போட்டு வேறு பாடலை தயார் செய்யும்படி இசையமைப்பாளரிடம் கூறினேன். அந்த பாட்டை அகற்றுவது சென்டிமெண்டாக சரியாக இருக்காது என்று பலரும் சொன்னதால் அதை படத்தில் வைத்தோம்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆடுகளம் படத்தில் இருந்து திரிஷாவை நீக்க நான் காரணம் அல்ல- டாப்சிபானு
» ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்
» ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்
» ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்
» ஐஸ்வர்யா பிறந்தநாளுக்கு தனுஷ் என்ன செய்தார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum