அரச மரத்தடியில் விநாயகர் இருப்பது ஏன்?
Page 1 of 1
அரச மரத்தடியில் விநாயகர் இருப்பது ஏன்?
விநாயகருக்கு துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு.துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார்.பின் வலது கையில் அங்குசம்,இடது கையில் பாசக் கயிறு, முன் பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்தகலசமாகிய மோகதம் ஆகியவை காணப்படும்.
அங்குசம் யானையை அடக்க உதவும் கருவியாகும்.விநாயகரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது.அதனால் தான் அவரது முகம் யானை வடிவில் இருக்கிறது.அவர் பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப் போடுகிறார்.
ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார்.இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார்.சாதாரண மோதகம் அல்ல இது.உலகமும் உருண்டை,இந்த மோதகமும் உருண்டை.உலகத்துக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.
இதே போல், அரச மரத்தடியில் விநாயகர் தவறாது இடம்பெற்றிருப்பார்.
இது ஏன் தெரியுமா? அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்பப்பை குறைபாடுகளை நீக்கும் சக்தி கொண்டது.
எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் உள்ள அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அரச மரத்தடியில் விநாயகர் இருப்பது ஏன்?
» வேப்ப மரத்தடியில் முருகன்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?
» வேப்ப மரத்தடியில் முருகன்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum