தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!

Go down

செய்த - முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா! Empty முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!

Post  ishwarya Tue Apr 02, 2013 12:45 pm

ஹைதராபாத்: முன்னாள் ஆந்திர அமைச்சர் மாதவ் ரெட்டியின் மருமகளும் டிசைனருமான அலெக்யா ரெட்டியை ரகசியமாக திருமணம் செய்தார் என்டி ராமராவின் பேரன் தாரக் ரத்னா.

என்டி ராமராவின் மகன் மோகன் கிருஷ்ணாவின் மகன்தான் இந்த தாரக் கரத்னா. இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய படம் நந்தீஸ்வருடு படத்தில் டிசைனராகப் பணியாற்றினார் அலெக்யா ரெட்டி. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து, ஒரே வீட்டில் பார்ட்னர்களாக வசித்து வந்த இருவரும் சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

அலெக்யா ரெட்டி விவாகரத்து பெற்றவர். ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மாதவ் ரெட்டியின் மகனை அவர் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

தாரக் ரத்னா – அலெக்யா ரெட்டி திருமணம் ரகசியமாக நடந்தாலும், இருகுடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். என்டிஆர் குடும்பத்தில் ஒருசிலர் மட்டும் திருமணத்துக்கு வரவில்லை.

என்டிஆரின் ஏழு மகன்களில் மிகவும் பணக்காரர் தாரக் ரத்னாவின் அப்பாவான மோகன் கிருஷ்ணாதான். தன் மகனுக்கு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்த ஆசைப்பட்டாராம். ஆனால் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மகன் மணப்பதால், சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துவிட்டாராம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் ரகசிய திருமணம் : தற்கொலைக்கு முயன்று காதலில் ஜெயித்தார்
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்
» நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் – ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum