தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்டர்நெட் சேவை வேகம் குறைந்ததால் உபயோகிப்பாளர்கள் அவதி

Go down

இன்டர்நெட் சேவை வேகம் குறைந்ததால் உபயோகிப்பாளர்கள் அவதி Empty இன்டர்நெட் சேவை வேகம் குறைந்ததால் உபயோகிப்பாளர்கள் அவதி

Post  meenu Mon Apr 01, 2013 2:26 pm

சென்ற வாரம் முழுவதும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு இணையதள உபயோகிப்பாளர்கள் அனைவரும் இந்த சேவையின் வேகக்குறைவு காரணமாக சிரமபட்டனர். இணையதளம் மூலம் தினசரி அனைத்து தொடர்புகளும் கொள்ளுபவர்களுக்கு இதுபெரும் பிரச்சினையாக மாறியது. இதற்குக் காரணமாக, கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த இணைப்புகளில் ஏற்பட்ட தடங்கல்களே என்று தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது.

முதலாவது இணைப்பு, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியே தென்கிழக்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழி வலையமைப்பாகும். இரண்டாவது இணைப்பு ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கின்றது. 15,000 கி.மீ. தூரம் பரந்துள்ள இதில்தான், பாரதி ஏர்டெல் நிறுவனமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் தங்களது வலைத்தளத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

மூன்றாவது இணைப்பு, மத்தியக் கிழக்கு நாடுகள் மூலம் இந்தியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இதில் ஏர்டெல் நிறுவனமும், டாட்டா நிறுவனமும் செயல்படுகின்றன. தங்களது சேவையாளர்கள், மார்ச் 27-ம்தேதி அன்று பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த டாட்டா நிறுவனம், இணைப்புகளை பசிபிக் மற்றும் தெற்கு ஆசியாத் தளங்களில் மாற்றிக் கொடுத்ததோடு, பழுதுபட்ட இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இணைய தளங்களில் குறுக்கீடுகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், சேவையிலும் முடக்கம் ஏற்படுவதால் இணைய தள சேவையை பயன்படுத்துபவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எம் பி-3, இன்டர்நெட் டெலிஃபோன், ஆன்லைன் ஷாப்பிங், இன்டர்நெட் சாட்டிங், இன்டர்நெட் கேம்ஸ், இ-புக், இன்டர்நெட் ஃபேக்ஸ் மற்றும் 10 பயன்பாடுகள்
» புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது
» ரஜினி பட ஷூட்டிங்கால் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் அவதி
» புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது
» எந்திரன் ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதி – வேடிக்கை பார்க்கும் போலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum