நவபாஷாண நவக்கிரக கோயில்
Page 1 of 1
நவபாஷாண நவக்கிரக கோயில்
மூலவர் - நவகிரகங்கள்
தீர்த்தம் - கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்)
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம் - இராமநாதபுரம்
இராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணல் எடுத்து, நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.
இராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். பார்வதி பரமேஸ்வரனும் இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார். சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்மபாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும்.
கோரிக்கைகள்:
முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவபாஷாண சிவலிங்கம்
» நவபாஷாண நவக்கிரக கோயில்
» நவபாஷாண நவக்கிரக கோயில்
» நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
» நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
» நவபாஷாண நவக்கிரக கோயில்
» நவபாஷாண நவக்கிரக கோயில்
» நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
» நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum