தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்

Go down

கோலாப்பூர் மகாலட்சுமி கோவில் Empty கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 3:27 pm

ஸ்தல வரலாறு.....

மராட்டிய மாநிலம் தென்மேற்கு பகுதியில் உள்ளது கோலாப்பூர் நகரம். இங்கு அமைந்துள்ள மகாலட்சுமி கோவில் மூலம் இந்த நகரம் புகழ் பெற்று விளங்குகிறது.

மகாலட்சுமி கோவில்..........

சக்தி பீடங்களுள் ஒன்றான இத் கோவிலில் மராட்டிய கட்டுமான பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமி கோவிலின் பிரதான வாசல் மேற்கு நோக்கி உள்ளது. இதன் வழியாக உள்ளே நுழைந்தால் உயர்ந்து நிற்கும் தீபமாலா கண்ணுக்கு தென்படும். ஒரே கல்லில் உயரமாக செதுக்கப்பட்டுள்ள, இந்த தீபமாலாவில், பல அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாலை வேளையில் இதில் ஒரே நேரத்தில் விளக்கேற்றி வைப்பது கோவில் முழுவதையும் பிரகாசிக்க செய்கிறது. தீப ஒளியில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு இதுபோன்று பல அகல்விளக்குகளால் தீபம் ஏற்றுவது மகாலட்சுமி கோவில் பொருத்தமானதாகவே இருக்கிறது. கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபங்கள் உள்ளன.

தேவி மீது சூரிய ஒளி........... கோவிலில் மூலவராக எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமியை, பக்தர்கள் அம்பாபாயி என்றும் அழைக்கின்றனர். கர்ப்பகிரகத்தில் மகாலட்சுமி தேவி மூன்றடி உயரத்தில் ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். ஆதிசேஷன் குடைபிடிக்க பளபளக்கும் திருமுகத்துடன் அன்னை கையில் அமுதசுரபி ஏந்தியபடி நிற்கிறாள்.

மகாலட்சுமி நின்றகோலத்தில் அருள்பா லிக்கும் கருவறையின், வலது புறம் மகா காளி சன்னதியும், இடது புறம் சரஸ்வதி தேவியின் சன்னதியும் அமைந்துள்ளன. எதிரில் கருட மண்டபமும் நிமிர்ந்து நிற்கிறது. வருடத்தில் இரண்டு முறை அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ந் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய கதிர்கள் அங்குள்ள ஜன்னல் வழியாக உள்ளே விழுகிறது.

இந்த சூரியகதிர்கள் மாலை நேரத்தில் தேவியின் முக மண்டலத்தில் படுவது சிறப்பாக கருதப்படுகிறது. அப்போது தேவியின் முகம் மேலும் பிரகாசிக்கும். இந்த கண்கொள்ளா காட்சியைப் தரிசிப்பதற் காகவே, கோவிலில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

தவம் இருந்து வரம்........... முன்னொரு காலத்தில் உலகத்தில் அதர்மத்தை பரப்பி, தேவர்களுக்கும், மனித குலத்திற்கும் இன்னல்களை கொடுத்து வந்த கோல்காசூரன் என்ற அசுரனின் 2 சகோதரர்களையும், 4 புத்திரர்களையும் மகாலட்சுமியின் சக்தியால் மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் வதம் செய்தனர். இதனை அறிந்ததும் சகோதரர்களையும், புதல்வர்களையும் இழந்த கோல்காசூரன் சீற்றம் கொண்டான்.

பின்னர் மகாலட்சுமியை வெல்வதற்காக, அவளை நோக்கியே கடுமையான தவம் மேற்கொண்டான். அசுரனின் அருந்தவத்தால் மனம் மகிழ்ந்து போன மகாலட்சுமி, அவன் முன்தோன்றினாள். மேலும், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்று கூறினார் மகாலட்சுமி. அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத கோல்காசூரன், தேவியே! நீங்கள் நூறு ஆண்டு காலம் கோல்காபூரில் வாசம் செய்யக் கூடாது என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

அசுரனின் அட்டகாசம்............ அசுரன் கேட்ட வரத்தை கொடுத்து விட்டு, அங்கிருந்து அகன்று இமயம் நோக்கி சென்றுவிட்டாள் மகாலட்சுமி. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோல்காசூரன், கோல்காபூரில் இருந்த கோவில்களையும், யாக சாலைகளையும், ரிஷிகளையும் கொன்று குவித்து வந்தான்.

மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனால் பெரும் இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். அவர்கள் மகாலட்சுமியின் உதவி வேண்டி நின்றனர். ஆனால் கோல்காசூரனுக்கு கொடுத்த வரத்தின் காரணமாக, கோல்காபூருக்கு சென்று அசுரனை வதம் செய்ய முடியாமல் போயிற்று மகாலட்சுமிக்கு. இதனால் அந்த அசுரனின் ஆட்டம் நூறு ஆண்டு காலம் தொடர்ந்தது.

அசுர வதம்........... காலக்கெடு முடிந்ததும் தேவியானவள் கோல்காபூர் வந்தாள். அப்போது தேவிக்கும், அசுரனுக்கும் போர் மூண்டது. மகாலட்சுமி பதினெட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் சென்று கோல்காசூரனுடன் யுத்தம் செய்து அவனை வதம் செய்தாள். இறக்கும் தருவாயில் மனந்திருந்திய கோல்காசூரன் தான் வதம் செய்யப்பட்ட இடம் புண்ணிய தலமாக விளங்க இங்கேயே எழுந்தருளி அருள்பாலிக்க வேண்டும் என்று மகாலட்சுமியிடம் கேட்டுக் கொண்டான்.

அதனை ஏற்று மகாலட்சுமி அவனுக்கு முக்தி அளித்தாள். கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தேவியின் உற்சவமூர்த்தி பல்லக்கு பவனி நடக்கிறது. இக்கோவிலில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் இங்கு வந்து மகாலட்சுமியை வழிபட்டால் வெயில் பட்ட பனி உருகுவது போல தோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் தங்களின் கஷ்ட நிவர்த்திக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து நிம்மதி பெற்று வருகின்றனர். எனவே நீங்களும் கோலாப் பூர் மகாலட்சுமியை தரிசித்து வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

வழிபாட்டு முறை..... மகாலட்சுமிக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. காலை தேவியை துயில் எழுப்புவதற்காக கோவிலில் சுப்ரபாதம் பாடப்படுகிறது. தொடர்ந்து மகாலட்சுமிக்கு பால் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து புது வஸ்திரங்கள் (ஆடைகள்) அணி விக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது.

காலை 8 மணிக்கு நடக்கும் இரண்டாம் கால பூஜையில் 16 விதமான உபசாரங்களும், 3ம் கால பூஜையின் போது தேவிக்கு பஞ்சாமிர்தத்தால் மகா அபிஷேகமும் செய்யப்படுகிறது. பின்னர் ஐந்து விதமான உபசாரங்களும், 5ம் கால பூஜையில் பாலும், இனிப்பு வகைகளும் படைக்கப்பட்டு தேவிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum