தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவானி வேதநாயகி அம்மன் கோவில்

Go down

பவானி வேதநாயகி அம்மன் கோவில் Empty பவானி வேதநாயகி அம்மன் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 3:11 pm

ஸ்தல வரலாறு........

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அலகாபாத்தில் உள்ளது. இந்த மூன்று நதிகளில் சரஸ்வதி நதி கண்ணுக்கு தெரிவதில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று தென்னகத்திலும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் தட்சிண திரிவேணிசங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் ஒரு நதி கண்க்கு புலப்படுவதில்லை என்ற கூற்று உள்ளது.

அம்மனின் பெயர் கொண்ட அந்த தலம் பவானி. அம்மனின் பெயரே, ஊருக்கும், அங்குள்ள நதிக்கும் அமையப்பெற்றது இறைவனின் செயலன்றி வேறொன்றும் இல்லை. இந்த தலத்தில்தான் மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. அதாவது பவானி, காவிரி மற்றும் அமுதநதி. இவற்றில் அமுதநதி கண்ணுக்கு புலப்படாத வகையில் பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாக இங்குள்ள இறைவனுக்கு சங்கமேஸ்வரர் என்ற பெயர் வந்துள்ளது. ஒரு முறை பூமியில் உள்ள புண்ணிய தலங்கள் அனைத்தையும் தரிசனம் செய்யும் நோக்கத்தில் குபேரன் பூமிக்கு வந்தார். ஒவ்வொரு தலங்களாக தரிசனம் செய்து விட்டு, அதன் ஒருபகுதியாக பவானி தலத்திற்கு வந்து சேர்ந்தார். தன்மை நிறைந்த இடம் என்பது குபேரனுக்கு புரிந்து போயிற்று.

குபேரனுக்கு அருள்புரிந்தார்......... அவரும் ஓரிடத்தில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். இறைவனை தரிசனம் செய்யும் நோக்கத்தில் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்ட குபேரனுக்கு, அவரது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமானும், ஒரு நதி கண்ணுக்கு புலப்படுவதில்லை என்ற கூற்று உள்ளது. திருமாலும் காட்சி தந்தனர்.

சிவபெருமான் அங்குள்ள இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார். ஈசன் சுயம்புவாக அருள்பாலித்து வரும் இந்த தலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம், ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், சுப்பிரமணியர் சுவாமிகள் மீது சூரிய ஒளி விழுகிறது.

இத்தல சிவபெருமான், அளகேசன், சடகமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், நட்டாற்றீஸ்வரன் திருநண்ணாவுடையார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

சோமாஸ்கந்த அமைப்பு கோவில்..... பவானி, சங்கமேஸ்வரி, பந்தார் விரலம்மை, வக்கிரேஸ்வரி, பண்ணையார் மொழியம்மை, மருத்துவ நாயகி, வேதநாயகி ஆகிய திருநாமங்களுடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். ஆதிகேசவப்பெருமாள், சுந்தரவல்லி தாயாரும், சங்கம விநாயகரும் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகின்றனர்.

வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள பசுவின் முன்பகுதியிலும், உடலின் பின்பகுதியிலும் தலை அமைந்துள்ளது. ஒரே உடல் இரு தலைகளுடன் காட்சியளிக்கும் பசு வித்தியாசமான தோற்றமாக இருக்கிறது. பெருமாளுக்கும், தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அமர்ந்துள்ளார்.

இந்த கோவிலில் வைணவம், சைவம் என இரு கோவில்கள் இருந்தாலும் ராஜகோபுரம் ஒன்றாகவே அமைந்திருப்பது சிறப்புக்குரியது. சிவன் சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையே முருகர் சன்னதி தனிச்சன்னதியாக அமைந்துள்ளது. இதனால் இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கொண்ட கோவிலாக திகழ்கிறது.

பஞ்சபூத லிங்கங்கள்............... கோவிலின் தென்மேற்கு பகுதியில் வீற்றிருக்கும் இலந்தை மரமானது தனிச்சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது. சுயம்பு மூர்த் தியாக குபேரனுக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம் இதுதான் என்பதால் இது மகத்துவம் வாய்ந்துள்ளது. இந்த மரத்தின் பழங்கள் இறைவனின் நைவேத்தியத்தில் தினமும் வைக்கப்படுகிறது.

மூலவர் கிழக்கு நோக்கியும், ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் உள்ளது. சிவன் சன்னதிக்கு பின்புறம் பஞ்சபூத லிங்கங்கள் அமைந்துள்ளன. பவானி நதியின் கரையில் விசுவாமித்திரர் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் கூறி பூஜித்துள்ளார்.

ஆகவே இது காயத்ரி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. நான்கு வேதங்களும் இத்தலத்தில் தீர்த்தங்களாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இங்கு வேண்டிக்கொண்டால், கல்வி அறிவில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சிறந்த பரிகார தலம்....... பவானி தலம் சிறந்த பரிகார தலமாகவும் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்த காரியம் நிறைவேற, இத்தலத்தில் உள்ள அமிர்தலிங்கத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆவுடையாரை 3 முறை சுற்றி வலம் வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு, விநாயகர், சங்கமேஸ்வரரை தரிசனம் செய்து, இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அகால மரணம் அடைந்தவர்களுக்கு இந்த தலத்தில் நாராயண பலி பூஜை செய்யப்படுகிறது. இதன் மூலம் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைவதாக கூறப்படுகிறது.

நாகதோஷம் இருப்பவர்கள், கல்லில் செய்த நாக சிலையை, ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் விநாயகர் அருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். ஆண்டுதோறும் ஆடி 18 அன்று இங்கு நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா விமரிசையானது.

அம்மனுக்கு தங்கக் கட்டில்...... ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பவானி கலெக்டராக வில்லியம் கரோ என்பவர் இருந்தார். அவருக்கு பவானி வேதநாயகி அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதற்காக அவர் கோவிலுக்கு சென்றார். ஆனால் வெளிநாட்டவர் என்று யாரும் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை.

மாறாக, கோவில் எதிரில் உள்ள சுவரில் மூன்று துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து அம்மனை, வில்லியம் கரோ தரிசனம் செய்து வந்தார். ஒருநாள் அவர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண் டிருந்தார். அப்போது ஒரு பெண் அங்கு வந்தார். அவர், உடனே இந்த வீட்டை விட்டு வெளியேறு என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டதைப் போல வில்லியம்கரோவும் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் மாடிப்பகுதி இடிந்து நொறுங்கியதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் தெரிந்தது, அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னது அந்த ஊரைச் சேர்ந்த பெண் அல்ல, வந்தது வேதநாயகி அம்மன் என்று.

தன் உயிரை காப்பாற்றிய அம்மனை தாய் போல் கருதிய கலெக்டர், தன் தாய்க்கு தங்கத்தால் ஆன கட்டில் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். அம்மனை வெளியில் இருந்து கலெக்டர் வில்லியம் கரோ தரிசனம் செய்த சுவரில் இன்றும் அந்த துவாரங்கள் காணப்படுகின்றன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum