பெரம்பலூர் அருகே தடம் மாறி சென்ற மினிபஸ் சிறைபிடிப்பு
Page 1 of 1
பெரம்பலூர் அருகே தடம் மாறி சென்ற மினிபஸ் சிறைபிடிப்பு
பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி அண்ணாநகர் வழியாக அனுக்கூருக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப் படுவதில்லை என்றும் தடம் மாறி பயணிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது. இது குறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மினிபஸ்கள் அண்ணாநகர் வழியாக செல்லாமல் குடிக்காடு வழியாக குறுக்கு வழியில் அனுக்கூருக்கு சென்று வந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட அண்ணாநகர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் 3 மணியளவில் அண்ணாநகர் வழியாக செல்லாமல் குறுக்கு வழியில் சென்ற மினிபஸ்சை குடிக்காடு அனுக்கூர் இடையே மறித்து சிறை பிடித்தனர்.
பின்னர் இது குறித்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் குவளையநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆடிஓ இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தி தடம்மாறி சென்ற மினி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெரம்பலூர் அருகே தடம் மாறி சென்ற மினிபஸ் சிறைபிடிப்பு
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» மாறி மாறி காலில் விழும் லிங்குசாமி-பாலாஜி சக்திவேல்!
» பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
» மாறி வரும் அறுவடை நடைமுறைகள்
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» மாறி மாறி காலில் விழும் லிங்குசாமி-பாலாஜி சக்திவேல்!
» பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
» மாறி வரும் அறுவடை நடைமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum