நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
Page 1 of 1

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் சமீப காலமாக நெல்லை பஸ்களில் கைவரிசை காட்டி வருகின்றனர். பயணிகளோடு நிற்கும் இவர்கள் நைசாக பிளேடு வைத்து பணத்தை திருடி விட்டு நைசாக “எஸ்கேப்” ஆகி விடுகிறார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக இந்த ஜேப்படியில் ஈடுபடுவதால் அபேஸ் செய்யும் பர்ஸ் மற்றும் பணத்தை கூட்டாளிகள் மூலம் கடத்தி விட்டு சக பயணி போல நின்று கொள்கின்றனர்.
இத்தகைய நூதன ஜேப்படி சமீபகாலமாக நெல்லை பஸ்களில் அதிகரித்து உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து பாளை, ஐகிரவுண்டு, டவுண் செல்லும் பஸ்கள் எப்போதும் கூட்டமாகவே காணப்படுகிறது. இதில் ஏறும் ஜேப்படி திருடர்கள் வயதான முதியவர்களை குறிவைத்து ஜேப்படியில் ஈடுபடுகிறார்கள்.
சமீபத்தில் பாளையை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரரிடம் ஜேசப்படி திருடர்கள் கைவரிசை காட்டினர். பெரும்பாலானோர் இதுபோன்ற ஜேப்படி குறித்து போலீசில் புகார் செய்வதில்லை.
இவ்வாறு பாதிக்கப்படு பவர்கள் புகார் செய்ய தயங்குவதால் ஜேப்படி திருடர்கள் போலீசில் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் புகாரை எதிர்பாராமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சி.சி. டி.வி. மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பஸ் நிலையம் முழுவதையும் போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கண்காணிப்பு பணியை மேலும் துரிதப்படுத்த வேண்டும். சி.சி. டி.வி. நிறுவப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படவில்லை.
சந்திப்பு பஸ் நிலையத்தில் முன்பு குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் (மப்டியில்) ரோந்து வருவது வழக்கம். சமீபகாலமாக போலீசார் ரோந்து வருவது குறைந்துள்ளது. இதனால் ஜேப்படி, திருட்டுகள் சர்வசாதாரணமாகி விட்டன.
இதே போல் பாளை புதிய பஸ் நிலையத்திலும் இதே நிலைதான். பஸ் ஏற காத்திருப்போர் வெகு நேரம் நின்றாலே போலீசார் சந்தேகத்துடன் விசாரிப்பதுண்டு. ஆனால் தற்போது இந்த நடைமுறை இல்லை. இதனால் புது பஸ் நிலையம், சந்திப்பு பஸ் நிலையம், பாளை பஸ் நிலையத்தில் ஜேப்படி திருடர்கள் வெகு நேரம் நின்று தருணம் பார்த்து கைவரிசை காட்டுகிறார்கள்.
எனவே நெல்லை சந்திப்பு மற்றும் பாளை புதிய பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் பணிக்கு அமர்த்தி ரோந்து சுற்றி வந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் மக்கள். பாளை பழைய பஸ் நிலையத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
இப்பகுதியில் மகளிர் பள்ளிகள் உள்ளன. காலை, மாலை வேளையில் இந்த பஸ் நிலையத்தில் மாணவிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவது அவசியம் என்கின்றனர் மக்கள்.
இதன் மூலம் ஜேப்படி திருட்டுகளையும் குறைக்கலாம். பாளை பஸ் நிலைய பகுதி யிலும் சி.சி. டி.வி. அமைத்து கண்காணிப்பு செய்ய வேண்டும். பஸ் நிலையங்களில் சந்தேகப்படும்படி திரிவோரை போலீசார் பிடித்து விசாரிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை அதிகப்படுத்தி குற்றங்களை குறைக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம்
» கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு
» டாக்டரா, ஆக்டரா தனன்யா தவிப்பு
» அதிகாரியை மாற்றக்கோரி நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum