நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
Page 1 of 1
நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
நடிகர் சங்கம் தொடங்கி திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் எப்போது அரசியல் சாயம் பூசிக் கொண்டனவோ அப்போதே முதுகெலும்பு என்பதே திரையுலகுக்கு இல்லாமல் ஆனது.
பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து ஒரு சின்ன உதாரணம். சென்ற கம்யூனிஸ்ட் ஆட்சியில் 50 ஆண்டுகளை திரையுலகில் கொண்டாடும் கமல்ஹாசனை வாழ்த்தி அரசு சார்பில் விழா எடுத்தனர். மலையாளத்திலேயே திலகன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் இருக்கையில் அவர்களை விட்டுவிட்டு கமலுக்கு விழா எடுப்பது சரியல்ல என அரசு எடுக்கும் விழாவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என இன்னசென்டின் தலைமையில் இயங்கும் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அறிவித்தது.
தனிப்பட்ட முறையில் ஜெயராம் போன்ற சில நடிகர்கள் இதில் கலந்து கொண்டனர். தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டதால் அம்மா இது குறித்து கேள்வியே கேட்கவில்லை. தவிர அந்த விழாவில் நடந்த ஒரு காமெடி நிகழ்ச்சியில் இன்னசென்டை போலவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, நான் அம்மாவுடைய பிரசிடென்ட் என்று சொல்வது போல் காட்சி வைத்திருந்தனர். அதற்கு இன்னொரு கேரக்டர் அம்மையுட நாயர் என்று கேள்விப்பட்டதுண்டு இது என்ன அம்மையுடைய பிரசிடென்ட் என்று கலாய்க்கும்.
இப்படி கலாய்த்த நடிகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் இன்னசென்டுடன் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்த பாராட்டுவிழா நடந்ததற்கு சில நாட்கள் கழித்து நடந்த விழாவில் அப்போதைய சி.எம். அச்சுதானந்தத்துக்குப் பக்கத்தில் இன்னசென்ட் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
கமல் பாராட்டுவிழாவை எதிர்த்தது சரி தவறு என்பதைத் தாண்டி அரசு அறிவித்த விழாவுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவிக்கும் முதுகெலும்பு தமிழ் திரையுலக சங்கங்கள் எதற்காவது உண்டா? மின்சார பிரச்சனையிலிருந்து, கூடங்குளம் வரை அரசின் செயல்களை கண்ணை மூடி ஆதரிப்பவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். அரசு தடை செய்த ஒரு படத்துக்கு ஆதரவாக அவர் தும்மக்கூட மாட்டார். பிரச்சனை முடியும்வரை சைலண்டாக இருந்த நடிகர் சங்கம், கமலுக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கருத்து சொன்னதற்காக விஷாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அதிகாரத்தின் மீது கொட்டாவிவிட தயங்குகிறவர்கள் விஷாலின் மீது கோபப்பட்டிருப்பது நல்ல தமாஷ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
» நடிகர் சங்கத்தின் அடுத்த ‘தல’ யார்?… ஜூன் மாதம் தேர்தல்!
» நடிகர் ஜாய் திடீர் மரணம்
» நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு
» நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum