வேதநாயகி அம்மன் கோவில்.......
Page 1 of 1
வேதநாயகி அம்மன் கோவில்.......
ஸ்தல வரலாறு....
வேதநாயகி அம்மன் கருணையே வடிவானவள். அவள் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளாள். அதில் ஆங்கில கலெக்டரின் உயிர் காத்த திருவிளையாடல் மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பவானி, மாவட்ட தலைநகரமாக விளங்கி உள்ளது. அப்போது கோவில் அருகிலேயே கலெக்டர் மாளிகையும் அமைக்கப்பட்டு கலெக்டர்கள் அங்கு வசித்து வந்தனர்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் வில்லியம் கரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக பணி புரிந்துள்ளார். அவர் வேதநாயகி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்வதை அறிந்து அவள் சக்தி மேல் நம்பிக்கை கொண்டார். கிறிஸ்தவரான அவருக்கு வேநாயகி அம்மனை தரிசிக்கும் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
தாயை காண விரும்பும் பிள்ளையின் மனநிலைக்கு சென்று விட்ட அவர் அதிகாரிகளுடன் பேசி வேதநாயகி அம்மன் கோவில் சுவரில் துவாரம் அமைத்து அதன் மூமல் அன்னையை தரிசித்து மகிழும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டார். ஒற்றை மூக்குத்தி ஒளிவீச அழகோவியமாக திகழும் வேதநாயகி அம்மனின் அருள் பொங்கும் முகத்தை கலெக்டர் வில்லியம்கரோ பார்த்து பக்தி செலுத்தி வந்தார்.
ஒருநாள் இரவு கடும் புயல் மழை பெய்தது. அப்போது கண்ணயர்ந்து தூங்கி கொண்டிருந்த வில்லியம்கரோ கனவில் வேதநாயகி அம்மன் சாயலில் ஒரு சிறுமி தோன்றி "நீ வெளியே சென்று விடு'' என்று கூறி உள்ளாள். இதனால் திடுக்கிட்டு விழித்த கலெக்டர் புயல் மழை பெய்வதை கண்டார். "காரணம் இல்லாமல் இந்த கனவு தோன்றி இருக்க வாய்ப்பில்லை'' என்று கருதிய அவர் பங்களாவை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது பங்களாவின் மேற்கூரை உடைந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் தன்னை காப்பாற்ற கனவில் வந்தவள் வேதநாயகியே என்பதை உணர்ந்த வில்லியம்கரோ தந்த கட்டில் ஒன்றை செய்து அன்னை வேதநாயகிக்கு காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
இரவு பள்ளியறை பூஜைக்கு வேதநாயகி அம்மனும், சங்கமேஸ்வரரும் எழுந்தருள்வது இந்த தந்த கட்டிலில் அமைக்கப்பட்ட பள்ளியறை ஊஞ்சலுக்குத்தான். பவானி புது பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவிலும் ,பவானி பழைய பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு அருகில் அருள்மிகு வேதநாயகி அம்மன் கோவில் உள்ளது.
கோவில் அமைப்பு....
திருக்கோவிலின் முகப்பிலேயே நந்தீஸ்வரர் நம்மை வரவேற்க அவரை தரிசனம் செய்து இராஜ கோபுரம் முகப்பில் இருக்கும் விநாயகர், அனுமன் சன்னதிகளை வணங்கி இராஜகோபுரத்தை கடந்தால் இடப்பக்கம் திருக்கோவில் அலுவலகமும் வலது புறம் அருள்மிகு வேணுகோபாலர் காக்கும் கடவுள் வெங்கடாசலாபதி சன்னதியின் கொடிமரம் ஆகியவற்றைக் கடந்தால் லட்சுமி நரசிம்மர்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன.
அதைத்தாண்டிச்சென்றால் சித்தி விநாயகர் சன்னதி தரிசித்து சென்றால் வேதநாயகி அம்மன் சன்னதி முன் கொடிமரம் தரிசித்து மூலவரை தரிசிக்க சற்று நடந்தால் சங்கமேஷ்வரர் ஆலய முகப்பில் கொடிமரம் வணங்கி விநாயகர், முருகரை வணங்கி உட்பிரகாரத்திள் நந்தீஷ்வரர் அவர்க்கு பின் சூரிய, சந்திர சிலைகள் இடது புறம் நால்வர்கள் சிலை வலதுபுறம் நடராஜர் சன்னதி, முன்பகுதியில் காக்கும் கடவுள்களை வணங்கி ஆலய உட்பகுதிக்கு சென்றால் வேதநாயகி அம்மன் அருள்மிகு சங்கமேஸ்வரரின் சன்னதியை தரிசனம் செய்த அரும் பாக்கியம் கிட்டுகிறது .

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பவானி வேதநாயகி அம்மன் கோவில்
» பவானி வேதநாயகி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» பவானி வேதநாயகி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum