ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்
Page 1 of 1
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்
மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீ வில்லிப்புத்தூர். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார்.
குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார். பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக்கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை எமக்கு உகந்தது! என்றருளினார்.
அது முதல் கோதைக்கு`சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!' என்று பெயர் உண்டாயிற்று. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம்.
இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை
» ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்(தமிழ்ப் பாடல்கள்) ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை(விளக்க உரை)

» ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை
» ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum