ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம்
Page 1 of 1
ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம்
ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் வழியில் இருக்கிறது. மூலவர், கள்ளப்பிரான் என்ற வைகுந்தநாதன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை செய்கிறார்.
வைகுந்த வல்லி, பூ தேவி என்ற இரண்டு தனிக்கோவில் நாச்சியார்கள் இங்கு தாயாராக எழுந்தருளி இருக்கிறார்கள். ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இக்கோவில் மண்டபத்தில் உள்ள சிலைகள் எல்லாம் சிற்ப கலையின் நேர்த்தியை பேசுகின்றன. தன் பக்தனான திருடன் ஒருவன், அரசனிடம் அகப்பட்டுக் கொள்ள, பெருமாள் அந்த திருடனை அரச தண்டனையில் இருந்து விடுவித்ததால் பெருமாள் கள்ளப்பிரான் என்னும் பெயர் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
இங்கு சந்தான கருடன், கிருஷ்ணன், லட்சுமி நரசிம்மன், மணவாள மாமுனிகள், திருவேங்கமுடையான், ஆஞ்சநேயர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் உண்டாக, நீர் சூழ்ந்த இடத்தில் சோமுகன் என்னும் அரக்கன் படைப்பு தொழில் ரகசியங்களை கவர்ந்து கொண்டான். அப்போது பிரம்மன் இத்தலத்தில் பெருமாளை வழிபட்டு அந்த ரகசியங்களை திரும்ப பெற்றார்.
திருடியவர்கள், இன்னும் தெரிந்தோ, தெரியாமலோ திருடிக் கொண்டிருப்பவர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும், நீதிபதியின் முன்பு தண்டனைக்காக காத்து கிடப்பவர்களும், செய்த தவறுக்காக உண்மையில் பிரார்த்தனையோடு மன்னிப்பு கேட்க இந்த ஸ்ரீ வைகுண்டம் பெருமாளை நேரடியாக சேவித்து, பிரார்த்தனை, பரிகாரங்களை செய்து விட்டால் அவர்களுடைய கோரிக்கை பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புனிதனாக மாற்றப்படுவார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம்
» ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம்
» பூச்சிகளின் தேசம்
» அவர்களின் தேசம்
» பூச்சிகளின் தேசம்
» ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம்
» பூச்சிகளின் தேசம்
» அவர்களின் தேசம்
» பூச்சிகளின் தேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum