மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
Page 1 of 1
மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
திருமகளின் திருஉருவ வழிபாடு இந்திய நாட்டில் சிந்து நிதி பள்ளத்தாக்கு காலத்தின் நாகரீக முறைகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது. லட்சுமி என்ற உருவம் செதுக்கிய கற்களும், வளையங்களும், புதையுண்ட படிமக்கற்களும் ஹரப்பா இடிபாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றன.
லட்சுமி தேவியின் உருவத்தை பற்றி பல சிற்ப சாஸ்திரங்களில் பலவாறு விளக்கப்பட்டிருக்கின்றன. பொதுப்படையாக எல்லாவற்றிலும் ஸ்வர்ண வர்ணா தங்க வடிவானவள், திவ்யரூபா, காண்பதற்கு அழகானவள் பிரசன்னவதனா, தோன்றுவதிலும் அழகாக வருபவள், பூர்ணசந்திரமுகி முழுமையான சந்திரனின் முகம் ஒத்திருப்பவள், யௌவனா தன் உடலில் ஒரு நளினத்தை காட்டுபவள் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கைகள், நான்கு கைகள், பதினாறு கைகள், பல கைகள் உடையவள் என்று சில வர்ணனைகளும் உண்டு. தாமரையை கையில் வைத்திருப்பது, இருக்கை பீடமாக அமர்ந்திருப்பது போன்றவையும் ஒரே கருத்துடையவை. கஜீராஹோவில் காணப்படுகிற லட்சுமி உருவங்களுக்கு பாதத்தில் சிங்க உருவம் உள்ளது.
மார்க்கண்டேய மகரிஷி இயற்றிய சப்தசதியில் மகிஷனைக் கொன்றவள் என்றும், இவளுக்கு 18 கைகள் உடையன என்றும் விவரித்திருக்கிறார். ஹேமாத்ரியின் சதுர்வர்ண சிந்தாமணி நூலில் விசித்திரமான முறையில் லட்சுமி நான்கு கைகளுடன் சிங்க வாகனம் ஏறியவளாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.
மேலும் தர்மபுரி ஆதீனக் கோவிலில் 18 கைகளுடைய லட்சுமி சிலை உள்ளது. அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலிலும், சேலம் ஸ்கந்தாஸ்ரம ஆலயத்திலும் மலேசியாவில் சிரம்பான், பத்து கேவ்ஸ், கிளாங், பூசோங் ஆகிய தல மாரியம்மன் சன்னதிகளிலும் இத்தகைய லட்சுமி காணலாம்.
குன்றத்தூர் ஸ்ரீ சக்தி கோவிலில் உள்ள மங்களமாறி சன்னதியில் கருவறை வெளிப்பிரகாரத்தில் அஷ்டலட்சுமிகளும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் யானைகளுடன் கஜலட்சுமி காட்சி தருகிறாள். தஞ்சை மாவட்டம் கிடாத்தலை மட்டில் ஸ்ரீ துர்கையே மகாலட்சுமியாக உள்ளாள்.
கோலாலம்பூரில் மகாலட்சுமி கோவிலிலும், பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் திருமகளுக்கு அழகான சன்னதியும் கமலங்களும் உள்ளன. சிவாகம விதிப்படி மன்னர்கள் கட்டிய சிவ ஆலயங்களில் கஜலட்சுமி வடிவங்களை வடமேற்கு மூலையில் இன்றும் காணலாம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» விநாயக வடிவ விளக்கம்
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» விநாயக வடிவ விளக்கம்
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum