குண்டம் இறங்க பண்ணாரி மாரியம்மன்
Page 1 of 1
குண்டம் இறங்க பண்ணாரி மாரியம்மன்
பண்ணாரி மாரியம்மன் கோவில் நடைபெறும் குண்டம் விழாவில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தார்கள்.
பண்ணாரி மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவுக்காக கடந்த 11–ந் தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. அன்று முதல் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் திருவீதி உலா 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்தது.
நாள்தோறும் சத்தியமங்கலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து அக்னி சட்டி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
குண்டம் விழா
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தொடங்கியது. முன்னதாக இன்று இரவு கோவிலில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சொந்தமான குளத்தில் பண்ணாரி அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதேநேரத்தில் கோவில் முன் குண்டம் பற்றவைக்கப்பட்டது. அதிகாலை வரை குண்டத்தில் ஊஞ்சமர கரும்புகள் (விறகுகள்) போட்டு குண்டம் தயார் செய்யப்பட்டது.
காத்திருக்கும் பக்தர்கள்
முன்னதாக குண்டம் இறங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பிற வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பக்தர்கள் குவிந்தனர்
நேற்று காலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சுற்றுலா பஸ், கார், வேன் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் உடை உடுத்திய பக்தர்களாகவே தெரிந்தது.
இதேபோல் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்களில் பண்ணாரி வந்தார்கள். கோவிலில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து பக்தர்கள் நடந்து கோவிலுக்கு சென்றார்கள். நேற்று மாலை கோவில் வளாகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பண்ணாரி அம்மன் குண்டம் விழாவையொட்டி கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சப்–இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படை போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையாளர், நிர்வாகிகள், பரம்பரை அறங்காவலர் மற்றும் அறங்காவல் உறுப்பினர்கள் செய்துள்ளார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா
» பண்ணாரி மாரியம்மன் கோவில்
» பன்னாரி மாரியம்மன் குண்டம்
» பன்னாரி மாரியம்மன் குண்டம்
» பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: மறுபூஜையுடன் நிறைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum