நெல்லையில் தடையை மீறி
Page 1 of 1
நெல்லையில் தடையை மீறி
நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லையை அடுத்த பேட்டை நவாப் வாலஜா பள்ளிவாசல் இடத்தில் தொழில் செய்தும், குடியிருந்து வரும் இந்துக்கள் தொடர்ந்து பலர் சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவதை கண்டித்தும், இந்த பிரச்சினையில் நெல்லை உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும் இந்து முன்னணி நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டி.பாலாஜி கிருஷ்ணசாமி, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், பாரதீய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர்கள் எம்.பி.பாலன், ஏ.சுப்பிரமணியன், துணை தலைவர் பி.வெட்டும் பெருமாள், கவுன்சிலர் அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
91 பேர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அப்படி இருந்தும் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 105 பேரை போலீசார் கைது செய்து, நெல்லை டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அந்த பகுதியில், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது
» எதிர்ப்பை மீறி வெளியாகும் ‘சத்யானந்தா’
» எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா – பிபாஷா!
» ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்
» \தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!
» எதிர்ப்பை மீறி வெளியாகும் ‘சத்யானந்தா’
» எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா – பிபாஷா!
» ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்
» \தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum