தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணை தாமதம்

Go down

மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணை தாமதம்  Empty மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணை தாமதம்

Post  meenu Tue Mar 26, 2013 5:02 pm

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி அன்று இரவு 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்டார். சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த வழக்கு விசாரணை டெல்லி சாகெத் சிறப்பு விரைவு கோர்ட்டில் தினமும் நடத்தப்படுகிறது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்.இந்த நிலையில் நேற்று இன்னொரு குற்றவாளி முகேசுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஏற்பட்டதால் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இவன் ராம்சிங்கின் தம்பி ஆவான். இந்த தகவலை அரசுதரப்பு சிறப்பு வக்கீல் கிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதனை அறிந்த முகேசின் வக்கீல் சர்மா, தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டார். ஏற்கனவே முக்கிய குற்றவாளி ஜெயிலில் இறந்து விட்டார். அவரது தம்பி இப்போது நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உடனடியாக முகேசை பார்க்க அனுமதிக்க வேண்டும், தனி டாக்டரை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்றும் வக்கீல் சர்மா நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.இதனால் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பான நிலை நீடித்தது. விசாரணையிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கின் மற்ற 3 குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திடீர் நெஞ்சுவலி… நடிகர் விஜயகுமார் மருத்துவமனையில் அனுமதி!
» பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை தொடங்கியது
» கற்பழிப்பு வழக்கு: நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறை
» மீண்டும் பிரீத்தி கற்பழிப்பு வழக்கு… கைதாவாரா மதுர் பண்டார்கர்?
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum