தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்

Go down

வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்  Empty வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்

Post  meenu Tue Mar 26, 2013 4:34 pm

தென் ஆப்பிரிக்காவில் சவானா என்ற இடத்தில் பிரபல வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் ஏராளமான ஒட்டகச்சிவிங்கிகள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளை ஜீப்பில் அழைத்து சென்று சுற்றிக் காட்டுவார்கள். அது போல ஜெர்மனி, தென் ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் 4 பேர் ஜீப்பில் சென்று ஒட்டகச்சிவிங்கிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ஒட்டகச்சிவிங்கி திடீரென்று வெறிபிடித்து இவர்களை நோக்கி பயங்கர வேகத்தில் ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ஜீப்பை ஓட்ட முயன்றார். அதற்குள் அது அவரை தாக்கி வெளியே தூக்கி வீசியது. ஜீப் மீது முரட்டுத்தனமாக மோதியது. டிரைவர் சுதாரித்துக் கொண்டு ஜீப்பில் ஏறி வேகமாக ஓட்டினார். ஆனாலும் அது சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி பின்னர் நின்று விட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இச்சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அதிலிருந்து மீள பல மணிநேரம் பிடித்தது.

பொதுவாக இந்த சரணாலயத்திலுள்ள ஒட்டகச்சிவிங்கிகள் இதற்கு முன் அட்டகாசம் எதிலும் ஈடுபட்டதில்லை என்றும், இது ஏதோ ஹார்மோன் பாதிப்பால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் பூங்கா நிர்வாகிகள் கூறினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum