மாட்டுப் பொங்கல்
Page 1 of 1
மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப் பொங்கல் நாளின் மறு நாள் (16-ந் தேதி) கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபாடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று கால் நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டி விடுவார்கள்.
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக் கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள், விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதே போல செய்வார்கள்.
தாம்பாளத் தட்டு களில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லா பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந் நாளில் விமரிசையாக நடைபெறுகிறது என்கிறார் யோகஸ்ரீ மணிபாரதி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum