தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகாலையில் துயில் எழும் எழுமலையான்

Go down

அதிகாலையில் துயில் எழும் எழுமலையான் Empty அதிகாலையில் துயில் எழும் எழுமலையான்

Post  meenu Fri Jan 18, 2013 12:55 pm

திருப்பம் தரும் திருப்பதி கோவிலில் நடைபெறும் அதிகாலை தரிசனம் சிறப்பு மிக்கது.இங்கு அதிகாலை மூன்று மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு விடும். 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடைபெறும்.

முன்னதாக, அதிகாலையில் ஏழுமலையானை துயில் எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு உழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து விடுவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.தொடர்ந்து, அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்தி விட்டு உள்ளே செல்வார்கள்.

அந்த நேரத்தில் " கவுசல்யா சுப்ரஜா ராம ...." என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.பின்னர் வீணையை இசைக்க ஏழுமலையான் அருகில் சீனிவாச மூர்த்தி விக்ரகத்தை கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பார்கள். சுப்ரபாதம் பாடி முடிந்ததும் சன்னதி திறக்கப்படும்.சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்தது 'நவநீத ஆரத்தி ' எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.

இதற்கு விசுவரூப தரிசனம் என்று இன்னொரு பெயரும் உண்டு.இந்த சேவையைக் காண பக்தர்களிடம் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.அதுவும் 3 மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கிடையில், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய திருப்பதி மலையில் உள்ள ஆகாய கங்கை தீர்த்தத்தில் இருந்து 3 குடங்களில் புனித நீர் கொண்டு வருவார்கள்.ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.

சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம் செய்ய எடுத்து வைக்கப்பட்ட ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.பின்னர் உத்தரணி என்ற கரண்டி போன்ற உபகரணத்தில் தண்ணீரை எடுத்து, அதை சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்(சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்).

பின்னர் மீதம் உள்ள நீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.ஆனால், முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள சீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்பொழுது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். தொடர்ந்து, பசும்பால், சந்தனம்,தேன்,மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும்.

அபிஷகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள்.பின்னர் அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன் பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum