துப்பாக்கி படத் தலைப்புக்குத் தடை
Page 1 of 1
துப்பாக்கி படத் தலைப்புக்குத் தடை
விஜய் நடிப்பில் உருவாகி வெளிவரத் தயாராக இருக்கும் துப்பாக்கிப் படத்துக்கு ஏற்கனவே வந்த சோதனைகள் பல. அதையெல்லாம் தாண்டி தற்போது புதிதாக ஒரு சோதனை வந்துள்ளது.
அதாவது, துப்பாக்கிப் படத்தின் தலைப்பைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கே.சி. ரவிதேவன் என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2009ம் ஆண்டே தான் `கள்ள துப்பாக்கி' என்று ஒரு படத்துக்கு பெயரை பதிவு செய்து படப்பிடிப்பை துவக்கி விட்டதாகவும், தற்போது, எஸ்ஏ சந்திரசேகரன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி துப்பாக்கி என்று பெயரை பதிவு செய்திருப்பதாகவும், இப்படத்தினால் எனது படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், துப்பாக்கி என்ற படத்தின் பெயரை ஜூலை 16ம் தேதி வரை எந்த வகையிலும் பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!
» விஜய் படத் தலைப்பு - அறிவித்தார் அமலா பால்
» துப்பாக்கி துப்பாக்கி
» ‘துப்பாக்கி’ இசை வெளியீடு
» துப்பாக்கி தடை நீங்கியது
» விஜய் படத் தலைப்பு - அறிவித்தார் அமலா பால்
» துப்பாக்கி துப்பாக்கி
» ‘துப்பாக்கி’ இசை வெளியீடு
» துப்பாக்கி தடை நீங்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum