இயக்குநர் ஏ.ஜகந்நாதன் காலமானார்
Page 1 of 1
இயக்குநர் ஏ.ஜகந்நாதன் காலமானார்
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.ஜகந்நாதன் (78) உடல் நலக்குறைவு காரணமாக திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 7) காலமானார்.
திருப்பூரைச் சேர்ந்த ஜகந்நாதன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார். சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள அவருடைய மகள் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இரண்டு நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு காலமானார்.
மறைந்த ஏ.ஜகந்நாதன் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக தன்னுடைய பணியைத் தொடங்கியவர். அதன் பிறகு திரைப்படத் துறையில் ப.நீலகண்டன், டி.பிரகாஷ்ராவ் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆர். நடித்த பல வெற்றிப் படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1973-ம் ஆண்டு வெளியான மணிப்பயல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதையடுத்து ஜெய்சங்கரின் நூறாவது படமான இதயம் பார்க்கிறது என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு 1975-ல் இவர் இயக்கிய எம்.ஜி.ஆரின் இதயக்கனி பெரும் வெற்றியடைந்து இவரை முன்னணி இயக்குநர் வரிசையில் சேர்த்தது.
சிவாஜிகணேசன் நடித்த வெள்ளை ரோஜா, முத்துக்கள் மூன்று, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், தங்க மகன், கமல்ஹாசன் நடித்த காதல் பரிசு, விஜயகாந்த் நடித்த நாளை உனது நாள் மற்றும் மீண்டும் பராசக்தி, அர்ச்சனா ஐ.ஏ.எஸ்., கொம்பேறி மூக்கன் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் 34 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 1994-ம் ஆண்டு ரகுமான், சுகன்யா நடித்த ஹீரோ என்ற படத்தை இயக்கினார்.
இவை தவிர, 7 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். அவற்றுள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான உ.வே.சாமிநாதய்யர் பற்றிய தமிழ்த் தாத்தா என்ற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அந்தத் தொடருக்காகவே அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் சார்பாக இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்தவர்.
மறைந்த ஏ.ஜகந்நாதனுக்கு ராஜாமணி என்ற மனைவி, உஷாதேவி, பவித்ரா என இரண்டு மகள்கள், முத்து அருண்குமார் என்ற மகன் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயக்குநர் கலைமாமணி கலைமணி காலமானார்!
» பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் யஷ் சோப்ரா காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» நடிகை மைனாவதி காலமானார்
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் யஷ் சோப்ரா காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» நடிகை மைனாவதி காலமானார்
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum