பங்குனி உத்திர சிறப்பு விழாக்கள்
Page 1 of 1
பங்குனி உத்திர சிறப்பு விழாக்கள்
ஸ்ரீராமன் திருக்கல்யாணம்.........
தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது. மேலும் ஸ்ரீ ரங்கநாதனையே மணாளனாக தன் மனத்தில் வரித்துக்கொண்ட ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
இறைச் சித்தப்படி திருமாலைப்பிரிந்து பூலோகம் வந்த திரு மகள் வஞ்சுளவல்லி நாச்சியாராய் அவதரித்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே என்று நாச்சியார் கோயில் தலப்புராணம் பேசுகிறது. எனவே சிறப்பு மிக்க இந்நாளில் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
உத்திரம் நல்ல நட்சத்திரம்......... உத்திரம் நட்சத்திரத்தை மோசமான நட்சத்திரமாக சில ஜோதிடர்கள் சொல்வது உண்டு. இதனால் பல பெண்களின் வாழ்க்கை பாழாகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆணுக்கு விபரீதம் ஏற்படும் என்பதற்கு ஜோதிட ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும் உத்திரத்து தாலி உறையில் என்பதெல்லாம் எதுகை-மோனைக்காக சொல் லப்பட்டதாகும்.
எனவே உத்திரத்தில் பிறந்து பெண்களைத் தகுந்த மணப்பொருத்தத்தின் பேரில் தாராளமாக மணம் முடிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களையும் சிலர் ஒதுக்கி வைக்கின்றனர். ஞானசம்பந்தரின் கோளறு பதிகம் படித்தால் எந்த நட்சத்திர தோஷத்தையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
பங்குனி உத்திரப்பூ......... சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்தி லிருந்து 5 கி.மீ.யில் இருக்கிறது கொள்ளிடம். இத் தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள். இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.
திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள். அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும். திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும். பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.
அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து போகின்றன. தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.
மாமிசம் வேண்டாம்....... கிராமங்களில் தர்மசாஸ்தாவை அய்யனார் என அழைக்கின்றனர். அவரது வாகனம் குதிரை. எனவே, குதிரை மீதமர்ந்த மிகப்பெரிய அய்யனார் சிலைகள் கிராமப்புறங்களில் அமைக்கப்படுகின்றன. இவருக்கு ஆடு, கோழி பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அய்யனாருக்கு பாயாசம் படைப்பதே நியாயமானது. அவருக்கு அசைவப் படையல் வைக்கக்கூடாது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும்போது, அசைவத்தை ஒதுக்கப்படுவது போல, அய்யனார் கோவில்களிலும் அசைவத்தை ஒதுக்க வேண்டும்.
பெருமாள் பெயரில் சாஸ்தா.......... நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோவில் உள்ளது. ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமரால் உருவாக்கப்பட்டவர். பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம். சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
பங்குனி உத்திரத்தில் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்று நம்பப்படுகிறது. வெறும் வயிற்றுடன் வணங்காதீர் பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும். ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.
அரை வயிறுக்கு சாப்பிட்டுவிட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும். மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும். அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பங்குனி உத்திர சிறப்பு விழாக்கள்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர சிந்தனை
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர சிந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum