தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பர்னாலா அறிவிப்பு
Page 1 of 1

சண்டீகர், செப். 3: பஞ்சாப் மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அறிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த அவர், சமீபத்தில் ஓய்வு பெற்றார். சொந்த மாநிலமான பஞ்சாப் சென்றுள்ள அவர், சண்டீகரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
பஞ்சாப் மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறேன். எனது சிரோண்மணி அகாலி தளம் (லோங்கோவால்) கட்சி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும். மாநிலத்தில் காங்கிரஸýக்கும், சிரோண்மணி அகாலி தளம் (பாதல்) கட்சிக்கும் மாற்று தேவைப்படுகிறது. அதனை நாங்கள் நிறைவு செய்வோம். மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். நானும் மாநிலம் முழுவதும் சென்று பழைய நண்பர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்க இருக்கிறேன். இப்போது மாநிலத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களின் வயதுகூட எனது அரசியல் அனுபவத்தைவிடக் குறைவுதான்.
மற்ற மாநிலங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது பஞ்சாப் பின்நோக்கிச் செல்கிறது. மாநிலத்தில் ஆளும் சிரோண்மணி அகாலி தளம் (பாதல்) கட்சியின் திறமையின்மைதான் இதற்குக் காரணம். ஹரியாணா கூட பஞ்சாப்பைவிட பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பஞ்சாப் மாநிலம் பர்னாலா தொகுதியில் இருந்து சுர்ஜித் சிங் 3 முறை எம்.பி.யாகவும், 6 முறை எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றுள்ளார். தனது சொந்த ஊரான பர்னாலாவை தனது பெயருடனும் இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராக இருமுறையும், தமிழ்நாடு, ஆந்திரம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநராகவும் சுர்ஜித் சிங் பர்னாலா பணியாற்றியுள்ளார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பர்னாலா அறிவிப்பு
» தீவிர எதிர்ப்பு… அம்பரீஷ் தலையீடு… நிகிதாவுக்கு தடை விலகுகிறது!
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி
» பிரபுதேவாவின் தீவிர ரசிகரான பிரபல டென்னிஸ் வீரர்
» “ராணா” படத்துக்காக ரஜினி தீவிர உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum