நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து சல்மான்கானுக்கு விலக்கு
Page 1 of 1
நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து சல்மான்கானுக்கு விலக்கு
கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சல்மான்கானின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்தபோது காரை சல்மான்கான் ஓட்டினார். அந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக சல்மான்கான் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை விசாரிக்கப்படவில்லை. தான் இதுவரை நீதிமன்ற உத்தரவின்படி முறையாக ஆஜராகி வருவதாகவும் தன்னால் வழக்கு தாமதமாகவில்லை எனவும் இனி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சல்மான்கான் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட மும்பை நீதிமன்றம் சல்மான்கானுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியல்வாதி வீட்டு திருமணத்தில் நடனம் ஆட சல்மான்கானுக்கு ரூ.3.5 கோடி
» சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி
» தங்கர்பச்சான் படத்துக்கு வரி விலக்கு
» அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு
» மாத விலக்கு காலத்தில் மல்லிகைப்பூ வைக்கலாமா?
» சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி
» தங்கர்பச்சான் படத்துக்கு வரி விலக்கு
» அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு
» மாத விலக்கு காலத்தில் மல்லிகைப்பூ வைக்கலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum