தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்

Go down

நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம் Empty நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்

Post  meenu Fri Mar 22, 2013 5:58 pm

பசுமை புரட்சி ஆரம்பித்த இருவது ஆண்டுகளுக்கு முன், நாட்டு விதைகளை பயன்
படுத்தி வந்த நம் விவசாயிகள் மெதுவாக வீரிய விதைகளை பயன் படுத்த
ஆரம்பித்தனர். ஏறி கொண்டே போன நம் நாட்டின் மக்கள் தொகை காரணமாக
எல்லோருக்கும் உணவு கிடைக்க வீரிய விதைகள் பயன் படுத்த ஆரம்பித்தோம்.
இப்போது, ஆண்டுகளுக்கு பின், இந்த பசுமை புரட்சி மூலம் வந்த Side effects
எல்லோருக்கும் உரைக்க ஆரம்பித்து உள்ளது.

திருநெல்வேலியின் உள்ள இயற்கை விவசாயி M.G.S. ஷங்கர் நம் நாட்டில்
இருந்த நாட்டு விதைகளை தேடி கண்டு பிடித்து அவற்றை பிரபல படுத்த முயற்சி
செய்து வருகிறார்.

நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம் Shankar11

இவர் கூறுகிறார் – “வீரிய விதைகளை லாப நோக்கோடு மட்டுமே பார்த்து
தனியார் கம்பனிகள் விதைகளின் விலையை ஏற்றி கொண்டே செல்கின்றனர். இந்த வகை
விதைகளுக்கு நிறைய நீரும், ரசாயன உரமும், பூச்சி மருந்துகளும் தேவை
படுகின்றன. இதனால், விவசாயம் இப்போது நஷ்டமாகி போய் கொண்டு இருக்கிறது.

நாட்டு விதைகள், இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்ததால், அவற்றுக்கு இந்த
பிரச்னைகள் குறைவு. இவற்றின் சாகுபடி சற்று குறைந்தே இருந்தாலும்
விவசாயிகள் கடன் வலையில் விழ வேண்டியதில்லை. அது மட்டுமில்லாமல்,
சாகுபடியில் இருந்தே அடுத்த பருவத்திற்கு விதைகளை எடுத்து சேகரித்து
வைப்பதின் மூலம் செலவு மிச்ச படும்”

இவர் கோடரம் சம்பா, தூய மல்லி போன்ற வகை நாட்டு நெல் வகைகளை SRI முறையில் பயிர் இட்டு வருகிறார். பஞ்சகவ்ய மற்றும் மண் புழு உரத்தையும் பயன் படுத்தி வருகிறார். ஒரு ஏக்கருக்கு ரூ5000 ஆகும் இடத்தில ரூ7o0 மட்டுமே செலவாகிறது என்கிறார்.

இவரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Mr. M.G.S. ஷங்கர், வலம்புரி அம்மன் கோயில் தெரு, திருநெல்வேலி 627006, மொபைல்: 09443339824. email: nelkan39@yahoo.co.in,
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum