"கடல்' படத்துக்கு தடை கோரி வழக்கு
Page 1 of 1
"கடல்' படத்துக்கு தடை கோரி வழக்கு
கடல் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஏ. ஜான்சன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவ மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், இதனைக் கருத்தில் கொள்ளாமல் திரைப்படத் தணிக்கை வாரிய அதிகாரிகள் அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்துள்ளனர்.
ஆகவே, கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் கடல் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி வழக்கு
» மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
» விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
» சூர்யா-ஜோதிகா கட்டடம் கட்ட தடை கோரி வழக்கு
» மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
» விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
» சூர்யா-ஜோதிகா கட்டடம் கட்ட தடை கோரி வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum