நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
Page 1 of 1
நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும்.
கதிர் விடும் சமயத்தில் நெல் வயலில் ‘சைகஸ் சிர்சினாலிஸ்’ செடிமண் பூக்களை ஏக்கர் 4 இடங்களில் வைத்தால், அதிலிருந்து வரும் வாடை, கதிர் நாவாய் பூச்சியை விரட்டும்.
30 கிலோ புளி விதையை ஒரு ஏக்கருக்கு நடவு நட்ட ஒரு நாள் பின்பு இட்டால் பயிர் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும்.
நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும்.
நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துங்ரோ மற்றும் நெல் குட்டை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.
‘I’ வடிவ மூங்கில் கழிகளை நெல் வயலில் பல இடங்களில் வைத்தால், பறவைகள் உட்கார்ந்து, நெல்லில்தாக்கும் பூச்சிகளின் புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.
ஆடிப் பெருக்கு அன்று விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
நடவு வயலை 4 முதல் 6 தடவை உழவுச் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் – செப்டம்பர்) நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடவு செய்தால் – மகசூல் குறையும்.
காற்று திசையில் நடவு செய்தால், பயிர் நன்றாக செழிப்புடன் வளரும்.
ஆட்டுக்கிடை கோடையில் பொடு, அதிக மகசூல் பெறு.
ஆட்டுக்கிடை முதல் பருவம், பசுந்தாள் உரம் இரண்டாம் பருவம் இட அதிக மகசூல் கிடைக்கும்.
100 கிலோ / ஏக்கர் பன்றி எரு இட்டால் 10 நாள் நடவு கழித்து இட்டால் அதிக மகசூல் பெறும்.
வேப்பம் புண்ணாக்குக்குப் பதில் வேப்பங்கொட்டை தூளை ஏக்கருக்கு இட்டால் நல்ல மகசூல் பெறலாம்.
களைகளைக்கட்டுப்படுத்த, விதைப்பிற்கு முன்போ அல்லது நடவுக்கு முன்போ, நீர்கட்டி களைகள் எல்லாம் முளைத்து வந்தவுடன், உழவுசெய்து, மண்ணில் மட்கச் செய்யவேண்டும்.
கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த, தக்கைப்பூண்டு செடியை பயிரிடலாம்.
நாற்றாங்காலில், இலைப்பேனை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தழை உரமாக இடவேண்டும்.
நெல்லில் இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம்புண்ணாக்கு சாற்றை தெளிக்கவேண்டும்.
இலை மடக்குப்புழு தாக்கிய வயலில், நாட்டு இலந்தை அல்லது அயிலை தாவர கிளையை புதைக்கவேண்டும்.
நெல்லில் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, நீருடன் வேப்பெண்ணெய் 30 மிலி / லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
தண்டு துளைப்பான் மற்றும் கதிர் காவாய் பூச்சியை கட்டுப்படுத்த செங்கல் சூளை சாம்பலை காலை வேளையில் இடலாம்.
கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த, 10 கிலோ பசுமாட்டு சாணி சாம்பலுடன் 2 கிலோ சுண்ணாம்பு தூள் மற்றும் 1 கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவவேண்டும்.
கதிர் நாவாய் பூச்சியின் சேதாரத்தை கட்டுப்படுத்த, 100 மிலி கருவேல் இலை சாற்றுடன் 10 கிலோ சாணியுடன் 10 லி தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, எருக்களைச் செடியை 12 அடி இடைவெளியில் நெல் வயலின் எல்லாப்புறமும் வளர்க்கவோ, நடவோ செய்யலாம்.
வேர் அழுகல் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
பிரெளன் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு உப்புடன் 15 கிலோ மணல் கலந்து இடவேண்டும்.
பிரெளன் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, விதை நெல்லை 20 % புதினா இலைக்கரைசலில் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
நெல் ‘துங்ரோ’ நோயைக் கட்டுப்படுத்த, ஆடாதொடை இலை சாற்றை தெளிக்கலாம்.
பனை ஓலையைக் குச்சியில் கட்டி, வயல் ஓரத்தில் நட்டால், ஓலைக் காற்றில் ஆடும்போது ஏற்படும் ஓசையாக நெல்மணிகளை உண்ண வரும் வாத்து, குருவியிலிருந்து நெல்மணியைக் காக்கலாம்.
ஒரு நெல் கதிரில் 100 நெல்மணிகள் இருந்தால் 20-22 குவிண்டால் / ஏக்கர் மகசூல் கிடைக்கும்.
120 நெல்மணிகள் ஒரு கதிரில் இருப்பின், அதுவே முழு மகசூலாகும்.
6 அடிக்கு அதிக உயரமுள்ள பெரியமண் குதிரில் அதிக நாள் வரை நெல்லைச் சேமிக்கலாம்.
சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் இலைகளைப் போட்டால் தானிய சேமிப்பு கிடங்கில் ஏற்படும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
நெல்மணிகள், சேமிப்பதற்கு முன்பு, நெல்மணியுடன் புங்கம், நொச்சி மற்றும் வேம்பு இலைகளைக் கலந்தால் பூச்சித் தாக்கலை தடுக்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum