ரஜினியைத் தொடர்ந்து ஜப்பான் மொழியில் சல்மான் கான் படம்
Page 1 of 1
ரஜினியைத் தொடர்ந்து ஜப்பான் மொழியில் சல்மான் கான் படம்
சல்மான் கான், காத்ரீனா கைப் நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'.
கபீர் கான் இயக்கிய இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் 'ஏக் தா டைகர்' திரைப்படத்தை ஜப்பான் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டுமே ஜப்பான் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வந்துள்ள நிலையில் இப்போது முதன்முறையாக சல்மான் நடித்த படம் ஒன்று ஜப்பான் மொழியில் வெளியாக இருக்கிறது.
முத்து படம் மூலமே ரஜினிக்கு ஜப்பானியர்கள் ரசிகர்கள் ஆனார்கள். இதனைத்தொடர்ந்து படையப்பா, சந்திரமுகி, எந்திரன் ஆகிய படங்களும் ஜப்பான் மொழி சப்டைட்டிலுடன் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டன. மேலும் கோச்சடையான் படத்தையும் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கின்றனர். ரஜினிகாந்த் மட்டுமே ஆசிய அளவில் மிகவும் புகழ் பெற்ற, வசூல் சக்கரவர்த்தியாக அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டில் விளங்கி வருகிறார் என்பதை அறிந்ததே. எனவே இந்தப் போட்டியில் சல்மான் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'ஏக் தா டைகர்' படத்தின் கதைப்படி இந்திய உளவுத்துறை ஏஜண்டும் பாகிஸ்தான் ஏஜண்டும் காதலித்து ஓடிப்போகிறார்கள்! அவர்களைக் கொல்ல இரண்டு நாடுகளும் துரத்துகின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல், சல்மான் கான், ஜாக்கி சான் இணையும் படம்
» கமல், ஜாக்கி ஜான், சல்மான் கான் கூட்டணியில் பிரம்மாண்ட படம்…!
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» விஜய் வேடத்தில் சல்மான் கான்
» வார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி
» கமல், ஜாக்கி ஜான், சல்மான் கான் கூட்டணியில் பிரம்மாண்ட படம்…!
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» விஜய் வேடத்தில் சல்மான் கான்
» வார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum