தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:ஷாஜஹானி புலவு

Go down

சமையல்:ஷாஜஹானி புலவு Empty சமையல்:ஷாஜஹானி புலவு

Post  ishwarya Fri Mar 22, 2013 11:51 am



தேவையானவை :

பெரிய வெங்காயம் - 2
பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பு - 10
பாஸ்மதி அரிசி - 350 கிராம்
கறி எலும்பு இல்லாமல் - 750 கிராம்
எலும்புகள் - 750 கிராம்
ஜாதிக்காய் - சிறிது
பட்டை - 1 அங்குலம்
மிளகு - 10
கிராம்பு - 5
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 3 அங்குலம்
பூண்டு - 10 பல்
சமையல் எண்ணெய் - 1/2 கப்
தயிர் - சிறிதளவு
வெள்ளை மிளகு - சிறிது
கருஞ்சீரகம் - சிறிது
கரம் மசாலா - சிறிது

செய்முறை:

புலவை அலங்கரிப்பதற்கு 2 பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். 10 பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பை மெலிதாகச் சிவி மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். 350 கிராம் பாஸ்மதி அரிசியை 150ml. தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 750 கிராம் கறியை எலும்பு இல்லாமல் வெட்டி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். எலும்புகளை 750 ml. தண்ணீரில், சிறிய ஜாதிக்காய், 1 அங்குலம் பட்டை, 10 மிளகு, 5 கிராம்பு, நறுக்கிய வெங்காயம் 1 மேஜைக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். எலும்பு வெந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புலவு தயாரிப்பதற்கு 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 3 அங்குலம் இஞ்சி, 10 பல் பூண்டு, இவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 1/2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், 10 மிளகு, அரைத்த இஞ்சி, பூண்டு இவற்றை வதக்கி, இத்துடன் கறியையும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிக் குக்கருக்கு மாற்றி, 1 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்ததும், குக்கரை மூடி, விசில் சப்தம் கேட்டதும் மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

வாணலியில் 1/2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த அரிசியைத் தண்ணீர் இன்றி இதில் போட்டு 3 நிமிடங்கள் வறுக்கவும். இத்துடன் எலும்பு வேக வைத்த தண்ணீரை ஊற்றி அரிசிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கருக்கு மாற்றி, கொதித்ததும் மூடி, ஒரு விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். அடி கனமானப் பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி நெய்யைத் தடவி, வேக வைத்த சாதத்தில் கொஞ்சம் பரப்பி அதன் மீது 1 மேஜைக்கரண்டி பாலாடை, சிறிதளவுக் கறிக்கலவை, சிறிதளவு தயிர் என்ற விகிதத்தில் சாதம் முழுவதையும் மாற்றி மாற்றி பரப்பி, ஒவ்வொரு அடுக்கிலும் வெள்ளை மிளகு, கருஞ்சீரகம், கரம் மசாலா தூவி, மேல் பக்கம் சாதம் வரும் படியாக அடுக்கி, மூடி, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். (OVEN வைத்திருப்பவர்கள் அதில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கலாம்) பரிமாறும் பொழுது அலங்காரத்திற்குத் தயாரித்தப் பொருட்களைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum