சமையல்:தக்காளிப்பழ அல்வா
Page 1 of 1
சமையல்:தக்காளிப்பழ அல்வா
தேவையானவை
தக்காளிப்பழம் - கால் கிலோ
கோதுமை மாவு - 150 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் தம்ளர்
முந்திரி பருப்பு - 8
கிஸ்மிஸ் - 25
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
நெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை
தக்காளிப்பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அவித்தெடுக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்துக் களையவும். சதைப் பாகத்தை நன்கு கையால் பிசைந்து விதைகளை நீக்கி பின் மிக்சியிலிட்டு நன்கு அடித்து எடுக்கவும். இது தக்காளி விழுது. தேங்காய்த்துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிழிந்து மூன்று முறையாக பால் எடுத்து வைக்கவும். முந்திரி பருப்பை பொடியாக ஓடித்தெடுத்து கிஸ்மிஸ் சேர்த்து சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும். மூன்று தம்ளர் தண்ணீருடன் கோதுமை மாவைச் சேர்த்து, நன்கு கலந்து அடிகனமுள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறவும். தீயை நிதானமாக எரியவிடவும். அரைப் பதம் வந்ததும் தக்காளி விழுது தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொடுக்கவும். இடை இடையே நெய்யை ஊற்றவும். அல்வா பதம் வந்ததும், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். ஒரு தாம்பாளத்தில் பரவலாக வைத்து தேவைக்கு ஏற்பதுண்டுகள் போடவும். இதுவே தக்காளிப்பழ அல்வா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:பாதாம் அல்வா
» சமையல்:கேரட் அல்வா
» சமையல்:ஆப்பிள் அல்வா
» சமையல்:கோதுமை ரவா அல்வா
» சமையல்:அசோகா அல்வா
» சமையல்:கேரட் அல்வா
» சமையல்:ஆப்பிள் அல்வா
» சமையல்:கோதுமை ரவா அல்வா
» சமையல்:அசோகா அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum