வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்
Page 1 of 1

கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளரி சாகுபடி செய்து தியாகதுருகம் பகுதி விவசாயிகள் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
எளிய முறையில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்டமுடியும் என்பதால் தியாகதுருகம் விவசாயிகள் சிலர் இதனை பயிரிட்டுள்ளனர்.
இது விதைத்த 30 நாளில் பூக்க துவங்குகிறது.
கொடியாக படருவதால் அதிக இடைவெளி விட்டு விதை நடப்படுகிறது.
50 நாளில் இருந்து பிஞ்சுகளை அறுவடை செய்யலாம்.
தொடர்ந்து 60 நாட்களுக்கு தினமும் பிஞ்சுகளை பறித்து விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.
ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த வெள்ளரி கொடியில் இருந்து தினமும் குறைந்தது 1,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
செலவுகள் போக குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
மக்கள் விரும்பி உண்பதால் இதனை வயலுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கூலியாட்களை கொண்டு பிஞ்சுகளை பறித்து மொத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வாரம் ஒருமுறை அளவான தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது என்பதால் மின்தடை பிரச்னையால் இப்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
குறித்த பருவத்தில் பறிக்காமல் விட்ட பிஞ்சுகள் முற்றி பழுத்தாலும் அதுவும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
குறுகிய கால பயிராக உள்ள வெள்ளரி சாகுபடி மூலம் கோடை காலத்தில் உபரிவருவாய் ஈட்ட முடியும் என்பதால் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்

» அதிக லாபம் பெற புதினா சாகுபடி
» அதிக லாபம் பெற புதினா சாகுபடி
» லாபம் தரும் தீவனப்புல் சாகுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum