வெள்ளரி சாகுபடி
Page 1 of 1
வெள்ளரி சாகுபடி
வெள்ளரி இரகங்கள் : கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
இதைக் களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.
பருவம்:
கோடைக்காலத்தில், பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மழைக்காலத்தில் ஜீலை மாதங்களிலும் பயிர் செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது, 60 செ.மீ அகலத்தில் 1.50 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால் அமைத்து, இவ்வாய்க்கால்களில் 45 செ.மீ நீளம், அகலம், ஆழமுடைய குழிகள் எடுக்கவேண்டும்.
பின்பு குழிகளில் மண்ணுடன் 10 கிலோ நன்கு மக்கிய தொழு எரு, கலப்பு உரம் 100 கிராம் இட்டு நீர்ப் பாயச்சவேண்டும்.
விதையும் விதைப்பும்
விதை அளவு :
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ
ஒரு கிலோ விதைக்கு, டைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கிலோ விதை (அ) இரண்டு கிராம் கேப்டான் அல்லது திராம் மருந்து கலந்து நேர்த்தி செய்து, குழிக்கு 4-5 விதைகள் விதைத்து, நன்கு முறைக்கும் வரை நீர் ஊற்றவேண்டும்.
செடி எண்ணிக்ளை பராமரித்தல் :
விதைகள் நன்கு முளைத்த பின் குழிக்கு நன்கு வளரும் செடிகள் 2-3 வைத்துக் கொண்டு மீதிச் செடிகளைக் களைந்துவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். நன்கு முளைத்தவுடன் ஒரு தண்ணீரும், அதன் பின் வாரம் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் கட்டவேண்டும்.
களை நிர்வாகம் :
விதைத்த 20-25 ஆம் நாளும் ஒரு மாத இடைவெளியிலும் களை எடுக்கவேண்டும்.
மேலுரம் :
விதைத்த 30 ஆம் நாளில் செடிகளை கொத்திவிட்டு மேல் உரமாக 50 கிராம் யூரியாவை ஒவ்வொரு குழிக்கும் இட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
வளர்ச்சி ஊக்கி :
செடிகளில் பெண்பூச்சிகள் விரைவில் உற்பத்தியாகவும், பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்கவும் எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீரில் 2.5 மில்லி என்ற அளவில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை நான்கு முறை தெளிக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பழ ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய் :
இதனைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும். டிடிடீ, பிஎச்சி, தாமிரம் மற்றும் கந்தகப்பவுடர் போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.
அறுவடை
விதைத்த 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். மொத்தம் 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம்.
மகசூல் :
எக்டருக்கு 90 நாட்களில் 8 முதல் 10 டன்கள் வரை பிஞ்சுக் காய்கள் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி
» கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி
» கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum