தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

Go down

பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு Empty பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

Post  meenu Thu Mar 21, 2013 1:15 pm

நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி வந்த, பலன் கொடுத்து வந்த டிப்ஸ்கள் இதோ:

மலை வாழைப்பழம்

மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம்.
புதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும்.
ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால் வாழையில் கரும்புள்ளி நோய் நிழலினால் ஏற்படும். மேலும் காற்றினால் மரங்கள் சாயவும் வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு கிலோ வேப்பம் புண்ணாக்குத் தூள் மற்றும் புகையிலைக் கழிவை தனித்தனியாக 5 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி பின் அவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வாழைக்கட்டையை நனைத்து நட்டால், நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம்.
வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட வாழையை வெட்டி எரித்துவிடவேண்டும். மேலும் அக்குழியால் 1-2 கிலோ சுண்ணாம்பு தூளை இடவேண்டும்.
விரைவாக விழாக் காலங்களில் பழுக்கவைக்க, வாழைக் குலைகளை பெரிய மண்பாண்டங்களில் வைத்து, அதில் நல்ல வாசனையுள்ள ஊதுப்பத்தியைக் கொளுத்தி வைத்து, அதன் வாய்ப்பகுதியை துணியினால் கட்டி வைக்கவேண்டும். இனிமேலாவது கார்ப்ய்ட் (Carbide) போட்டு பழுக்க வைக்க வேண்டாமே!

மா

மாந்தோப்பிற்குள் சூரியகாந்தியை பயிர் செய்தால், தேனீக்களை கவர்ந்து, அதிக மகரந்தசேர்க்கை நடந்து, மா மகசூல் அதிகரிக்கும்.
வேப்ப எண்ணெயைத் தத்துப்பூச்சி கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
ஆவாரம் குலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மா காய்களை இட்டுபின் ஆவாரம் குலையைப் பரப்பினால், விரைவாக மா பழம் பழுக்கும்.

திராட்சை

பழுப்பு நிறமுள்ள 1/2 நிறமுள்ள நல்ல மொட்டு உள்ள தண்டுப் பகுதியை நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.
கடலை புண்ணாக்கை ஊறவைத்து, கரைத்து, அக்கரைசலை 1 வாளி ஒரு குழிக்கு ஊற்றினால் நல்ல தரமான திராட்சையையும் அதிக மகசூலையும் பெறலாம்.
10 அடி இடைவெளியில் நடவுக்கு 3 மாதத்திற்கு முன்பு குழித் தோண்டி, அதில் கொழிஞ்சி, அகேவ், எருக்களைக் போன்ற பசுந்தாள் இலைகளை இடு மண் கொண்டு மூடினால், அவை மட்கி விடும். பின் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
ஒவ்வொரு திராட்சைக் கொடியைச் சுற்றி மழைக்காலத்திற்கு முன்பு வட்ட வடிவ குழித்தோண்டி அதில் பசுந்தாள் உரச்செடி மற்றும் தொழு உரத்தை 3:1 விகிதத்தில் இட்டு, மண் கொண்டு மூடினால், நல்ல மகசூல் பெறலாம்.

கொய்யா

அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்களை இலையை 3 கி வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

எலுமிச்சை

இறந்த நாயை, வேர்ப்பகுதியில் புதைத்தால் எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கும்.
ஒரு வாளி / மரம் என்ற அளவில் பன்றி எருவை இட்டால், பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
500 கிராம் காய்ந்த வேப்பம்பழத் தூளை ஒரு மரத்திற்கு இட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

சாத்துக்குடி

தண்டு துளைப்பான் தாக்கிய மரத்திலுள்ள ஓட்டைகளை கழுவி சுத்தம் செய்து, சுண்ணாம்பு கரைசலில் தோய்த்த பஞ்சை அதில் அடைத்து விடலாம் அல்லது லெமன் கிராஸ் புல்லை ஓட்டையை சுற்றி இடவேண்டும்.
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் மரத்தைச் சுற்றி 2 அடி அகலத்திற்கு பச்சை சோற்று கற்றாழை செடித் துண்டுகளை இடலாம்.
எறும்புத் தொல்லையை தடுக்க, விதையுடன் சாம்பல் கலந்து வைக்கலாம்.

பிளம்ஸ்

பிளம்ஸ் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைக்கும்போது, அதில் ‘பேன்’ வகை இலைகளை (இடைவேளை) போட்டால், பழம் பழுப்பது தாமதப்படும். ஏனெனில் மெதுவாகவே காயும்.

பலாப்பழம்

பலாப்பழத்தை பழுக்க வைக்க, காம்புப் பகுதியில் சிறிது துளைப்போட்டு, சின்ன குச்சியை சொருகி 3-5 நாட்கள் அப்படியே வைத்தால் பழுத்துவிடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக்
» வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum