சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்
Page 1 of 1
சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்
- சோளக்
கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை
உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து,
கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம். - மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு திறனைப் பெற சோள விதைகளை சாதாரண உப்பு கரைசலில் ஊற வைத்து, விதைக்கவேண்டும்.
- சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின்
வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு
நோயையும் கட்டுப்படுத்தலாம். - விரைவாக முளைக்கவும் தண்டு ஈ தாக்குதலை தடுக்க, போதிய அளவு சுடுநீரில்
வைத்து, அதை திறந்த வெளியில் இரவு முழுவதும் ஆறும்படியாக
வைத்திருக்கவேண்டும். அடுத்த நாள் விதைப்பிற்கு முன்பு, சோள விதைகளை
குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்தால் நல்ல தரமான
நாற்றுக்களைப் பெறலாம். - இனப்பயிரின் ஊடே நாட்டுக் கலப்பையை ஓடவிட்டால், சராசரி செடி எண்ணிக்கை இருக்கும்படி செய்யலாம்.
- வைகாசி – ஆனி (மே – ஜீன்) மாதத்தில் விதைத்தால், தண்டு ஈ மற்றும் துளைப்பான் தாக்குதலை தடுக்கலாம்.
- சோளத்துடன், தட்டைப்பயிரை ஊடும்பயிர் செய்தால், தட்டைப்பயிரின் நெடி, தண்டு தாக்குதலை தடுக்கலாம்.
- அவரையை ஊடுப்பயிர் செய்தாலும் தண்டு துளைப்பான் தாக்கம் குறையும்.
- வேப்பம் புண்ணாக்கு கரைசலைச் சொட்டுச் சொட்டாக தண்டில் ஊற்றினால் குருத்து துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
- தாக்குதலிலுள்ள இலைகளின் மீது, சாம்பலைத் தூவினால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
- பால் பிடிக்கும் தருணத்தில் சாம்பல் தூவுவதால் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
- கொத்தமல்லியை சோளத்துடன் கலப்பு பயிராக பயிர் செய்தால் ‘ஸ்ரைகா’ எனப்படும் தொத்துக் களையை கட்டுப்படுத்த முடியும்.
- கறுப்பு துணியை நீளமான பூச்சிகள் கட்டி, நடுவயலில் வைத்தால் காக்காவை விரட்டும்.
- தானிய சேமிப்பு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, சோளத்துடன் சாம்பலை கலந்து வைக்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்
» சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்
» திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா
» முருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்
» பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்
» திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா
» முருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்
» பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum