தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக லாபம் பெற புதினா சாகுபடி

Go down

அதிக லாபம் பெற புதினா சாகுபடி Empty அதிக லாபம் பெற புதினா சாகுபடி

Post  meenu Tue Mar 19, 2013 4:58 pm

அதிக லாபம் பெற புதினா சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு. மருத்துவ குணங்கள் கொண்ட புதினா உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குத் தேவையான புதினா பயிரிடப்படுகிறது.
புதினாவை வணிக நோக்கில் பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
மித வெப்பப் பகுதிகளில் வடிகால் வசதியுள்ள இருபொறை மண், காரத்தன்மை கொண்ட நிலங்களில் புதினா நன்கு வளரும்.
நிலத்தை நன்கு பண்படுத்தி ஹெக்டேருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட்டால் போதுமானது.
புதினா செடிகள் பெரும்பாலும் பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை.
அவ்வப்போது சாதாரணமாக களை எடுத்தால் போதுமானது.
ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம்.
உணவுக்கான புதினா நடவு செய்த 5-வது மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.
ஒருமுறை நட்ட செடிகள் 4 ஆண்டுகள் வரை பலன் தரும்.
ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கிலோ இலைகள் கிடைக்கும்.
எண்ணெய் தயாரிப்புக்கான புதினாவில் இருந்து ஆவி வடித்தல் முறையில் 150 முதல் 250 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம்.
புதினா எண்ணெய் சர்வதேச சந்தையில் கிலோ ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய்க்கான புதினா 90 நாளில் அறுவடைக்கு வரும்.
வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினா பயிரிடலாம்.
90 நாளில் ஒரு ஹெக்டேரில் ரூ.30 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum