தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'3' எப்படி?

Go down

'3' எப்படி?                                  Empty '3' எப்படி?

Post  ishwarya Tue Mar 19, 2013 11:33 am

3' படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியிருக்கிறது! ஆனால், இந்த '3' படம் இன்று 30/2/12 அன்று வெளிவருவதில் நேற்று வரை ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தனவாம்! குழப்பங்கள் திரையரங்க உரிமையாளர்களாலோ விநியோகஸ்தர்களாலோ, பைனான்ஸியர்களலாலோ அல்லவாம்! வழக்கமாக இது போன்ற குழப்பங்களோ சிக்கல்களோ மேற்படி படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கும் பைனான்ஸியர்களாலோ வாங்கி வெளியிடும் தியேட்டர் அதிபர்கள், விநியோஸ்தர்களாலோ ஒரு படத்திற்கு வருவது சகஜம்! ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை அப்படத்தின் நாயகர் தனுஷ்., இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டவர்களிடையே தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? எனும் தயக்கம் வியாபித்திருந்திருக்கிறது காரணம்? கடைசி நேரத்தில் படத்தில் டபுள்மீனிங் டயலாக்குகள் செக்ஸியான சீன்கள்...ஜாஸ்தி இருப்பதாக அவர்களது மனதிற்குப்பட., அதனால் நேற்று வரை எடிட்டிங், கட்டிங், வெட்டிங்ல ஒட்டிங் என '3' படம் எடிட்டிங் ரூமிலேயும், லேபிலேயும் இருந்திருக்கிறது! இதனால் நேற்று இரவு ஒன்பது மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் திட்டமிடப்பட்டிருந்த பிரிமியர் ஷோ கேன்சலாகி இன்று வெள்ளி இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! மேலும் அப்படத்தில் இடம் பெறும் 'கொலவெறி..' பாடலில் இருக்கும் பெப் படத்தில் மிஸ்ஸிங் என்பதும் ஏற்கனவே கிளைமாக்ஸில் ஹீரோ தனுஷ் இறப்பது மாதிரி இருந்த காட்சிகள் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்! சரி '3' படத்தின் கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் 'மயக்கம் என்ன' தனுஷை நினைவுபடுத்துகிறது. இயக்குநர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் இயக்குநராகி இருப்பதால், அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது. 'துள்ளுவதோ இளமை' படத்தையும் 'மயக்கம் என்ன' படத்தையும் கலந்து கட்டி அடித்தது போல உள்ளது. மீதிக்கதையை நாளை விமர்சனம் மூலமாக தருகிறோம். ஏன் மேடம் ஒங்களுக்கு இந்த கொலவெறி....?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» பெர்ஃப்யூம் வாங்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?
» இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum