தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை: ருக்மணி

Go down

சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை: ருக்மணி Empty சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை: ருக்மணி

Post  ishwarya Mon Mar 18, 2013 4:28 pm

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ருக்மணி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த ருக்மணி, சிறு வயதிலேயே பரதம் கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அசாத்திய தைரியமும், தன்னம்பிக்கையும் ருக்மணியின் பலம். 'பொம்மலாட்டம்', 'ஆனந்த தாண்டவம்' படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் கமிட் ஆகி இருப்பதால் ரொம்ப பரபரப்பாக காணப்படுகிறார். 'ஆனந்த தாண்டவம்' படத்திற்கு பிறகு ஏன்...? இவ்வளவு பெரிய இடைவெளி என்று ருக்மணியிடம் கேட்டபோது தன் மனசில் உள்ள எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துவிட்டார். சினிமாதான் எனக்கு உலகம் என்பது கிடையாது. சிறுவயது முதலே பரதம் கற்றதால், அதுதான் எனக்கு உயிர். இடையில் சில படங்கள் கிடைத்ததால் நடித்தேன். ஆனால் அதன்பிறகு ஏனோ சரியான படங்கள் எதுவும் வரவில்லை. நான் எப்பவும் போல பல்வேறு நாடுகளில் நடந்த டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தேன். இப்போதுகூட அமெரிக்காவில் என்னோட டான்ஸ் ஷோ இருக்கு. நல்ல கதை மற்றும் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை. நானா நடிக்க மாட்டேன்றேன், நல்ல படம் கிடைக்கணுமே, இப்போது நடித்து வரும் சரித்திர படமான 'கோச்சடையானில்' எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். நம்பிக்கைதானே வாழ்க்கை.......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் விருப்பம் இல்லை! த்ரிஷா
» எனக்கு ரகசிய காதலர் இல்லை: அசின் பேட்டி
» மீண்டும் குடும்ப பந்தத்தில் சிக்க மாட்டேன்: 2-ம் திருமணத்தில் விருப்பம் இல்லை; சோனியா அகர்வால் விரக்தி
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum