தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்த சமீரா!

Go down

ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்த சமீரா!  Empty ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்த சமீரா!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:09 pm

ஆக்ஷன் படங்கள் சவாலானவை என்று நடிகை சமீரா ரெட்டி கூறினார். 'வாரணம் ஆயிரம்' 'வெடி', 'வேட்டை', உள்ளிட்ட தமிழ் படங்களிலும், இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருபவர் சமீரா ரெட்டி. இவர் இந்தியில் 'தேஸ்' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கி இருக்கும் இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அஜய் தேவ்கன், அனில் கபூர், சயீத் கான் ஆகியோருடன் இணைந்து சமீரா ரெட்டியும் நடித்து இருக்கிறார். பொதுவாக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு உடலில் காயங்கள் ஏற்படுவது வாடிக்கையானது. அந்த வகையில் 'தேஸ்' படத்தில் ஒரு சண்டை காட்சியில் நடித்த போது சமீரா ரெட்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் அதை பொருட்படுத்தாமல் சண்டை காட்சியில் தைரியமாக நடித்து டைரக்டரிடம் சபாஷ் வாங்கினார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் பைக் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஆக்ஷன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீரா ரெட்டி கூறியதாவது:- ஆக்ஷன் படங்கள் எளிதானவை அல்ல. அவை அச்சம் ஏற்படுத்துபவை. அதே சமயம் சவால் மிகுந்தது. இந்த படத்தில் (தேஸ்) பைக் ரேஸ் காட்சியில் நான் நடித்து இருக்கிறேன். படத்திற்கு ஒப்புக்கொண்ட போது, முதலில் சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்பினேன். ஆனால் உண்மையில் அதுபோன்ற காட்சிகளில் நடித்தபோது, அப்படியே பின்வாங்கி விடலாமா? என்று கூட நினைத்தேன். ஆனால் அந்த ஆக்ஷன் காட்சியில் எப்படி நடித்தேன் என்று இப்போது ஆச்சரியப்படுகிறேன். 'தேஸ்' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்த சமயத்தில் எனக்காக செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்தது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த 'தேஸ்' படத்தில், குத்து பாடல் ஒன்றுக்கு மல்லிகா ஷெராவத் ஆட்டம் போட்டு உள்ளார். முதலில் இந்த பாட்டுக்கு சமீரா ரெட்டி, மல்லிகா ஷெராவத், ஜியா கான் ஆகிய மூவரும் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் குத்துப்பாடலில் சமீரா ரெட்டிக்கு பதிலாக மல்லிகா ஷெராவத் நடிப்பதில் தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின் ஆர்வமாக இருந்தார். 'தேஸ்' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் 27-ந் தேதி வெளியாகிறது. எப்டியோ நடிச்சிட்டீங்கள்ல.. விடுங்க வீராங்கனை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum