சமையல்:மக்காச்சோள குருணை பொங்கல்
Page 1 of 1
சமையல்:மக்காச்சோள குருணை பொங்கல்
வித்தியாசமா பொங்கல் சாப்பிடணும்னு விரும்புகிறவர்களுக்காகவே இந்த சத்தான சுவை மிகுந்த பொங்கல். செய்து சுவைத்துப் பாருங்கள். ஆரோக்கியத்துடன் மணமும் ருசியும் மனதை மயக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி குருணை - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
காய்ந்த சோள ரவை - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 2
மிளகு, சீரகம்(பொடித்தது) - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய், நெய்(கலந்தது) - 1/2 கப்
உடைத்த முந்திரி - 1 கப்
செய்முறை:
* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.
* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.
* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மக்காச்சோள குருணை பொங்கல்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» சமையல்:வெஜ் பொங்கல்
» சமையல்:தேங்காய்ப்பால் பொங்கல்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» சமையல்:வெஜ் பொங்கல்
» சமையல்:தேங்காய்ப்பால் பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum